Devotion General Literature

SUPRADIPAM in VISAKAM: Lighting a Musical Birthday Candle for Muruga!

TAMILENGLISH

நமது ஆன்மீக மற்றும் இசைப் பயணத்திற்குள் செல்வதற்கு முன், இந்தப் பதிவு எப்படி உருவானது என்ற ரகசியத்தை உங்களிடம் சொல்லிவிடுகிறேன். எல்லாமே சமீபத்தில் நடந்த சிகாகோ தியாகராஜ உத்சவத்தின் (Chicago Tyagaraja Utsavam) 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தில் தான் தொடங்கியது. அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிறப்பு திருப்புகழ் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அதில் பங்கெடுக்க நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

திடீரென்று என் மகள் பின் சீட்டிலிருந்து ஒரு ஏவுகணையை வீசினாள்: “அப்பா, தியாகராஜ சுவாமிகள் முருகப் பெருமானைப் பற்றி ஏதாவது பாடல் பாடியிருக்கிறாரா? திருப்புகழுக்கும், தியாகராஜருக்கும் என்ன சம்பந்தம் ?”

பெரிய கர்நாடக சங்கீத ரசிகன் என்று என்னை நானே மெச்சிக்கொண்டு, மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு, உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. காரின் இண்டிகேட்டர் லைட் போல, விட்டு விட்டு முழிக்கத் தொடங்கினேன். தியாகையருக்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம் ? என்ன பதில் சொல்வது ? சமாளித்துக் கொண்டு, ஒரு அப்பாவாக என் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள, “நல்ல கேள்வி ! நாம் அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். இப்போ திருப்புகழ் பாட்டுல மட்டும் கவனம் இருக்கட்டும்!” என்று சொன்னேன். மட்டும் என்பதில் அதிக அழுத்தம் கொடுத்தேன்.

மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்விக்கு, வீட்டிற்கு வந்ததும் கூகுள் ஆண்டவரின் உதவியோடு தீவிரமாகத் தேடினேன். ஓர் அரிய இசைப் பொக்கிஷம் என் கண்ணில் பட்டது. அதுமட்டும் இல்லாமல், இன்னும் இரண்டு நாட்களில் வைகாசி விசாகம் வரப்போகிறது! பிரபஞ்சமே எனக்குக் கொடுத்த சிக்னல் இது என்று புரிந்து கொண்டு, என் மானத்தைக் காப்பாற்றிய அந்தப் பாடலைப் பற்றியும், முருகனின் கதையையும் உங்களுக்காக இந்தப் பதிவில் வழங்கியுள்ளேன்.

தியாகராஜ சுவாமிகளும், முருகனும் :

தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீ ராமரின் தீவிர ‘அடிபொடி’ என்பது நமக்குத் தெரியும். “ராமனைத் தவிர வேறு யாரையும் பாட மாட்டேன்” என்று வாழ்ந்தவர். ஆனால், சில சமயங்களில் விதிகளும் விதிவிலக்காகும் அல்லவா? அப்படி தியாகராஜர் தனது வழக்கமான ‘ராம பக்தி’ நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி, மேன்மையான மயில் மேல் அமர்ந்திருந்த தாமரைக் கண்ணனின் அழகில் மயங்கி பாடிய ஒரு அரிய பாடல் தான் “வரஷிகி வாஹன” (Varashikhi Vahana) என்று தொடங்கும் பாடல். எனக்குத் தெரிந்த வரையில், தியாகராஜர் முருகப் பெருமானைப் பற்றி பாடிய ஒரே ஒரு பாடல் இதுதான்! அதை ‘சுப்ரதீபம்’ (SupraDheepam) என்ற மிக அரிய ராகத்தில் அமைத்தார். ‘சுப்ரதீபம்’ என்றால் “மங்களகரமான பிரகாசமான விளக்கு” என்று பொருள். அந்தப் பாடலில் அவர் என்ன பாடியிருக்கிறார் என்று பார்ப்போம்:

  • பல்லவி: வரஷிகி வாஹன வாரிஜ லோசன (மேன்மையான, சிறந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே! தாமரை போன்ற கண்களை உடையவனே!). இதன் பொருள் “முருகா! பிரீமியம் குவாலிட்டி மயிலை வாகனமா வச்சிருக்கீங்க. உங்க தாமரை கண்ணு ரொம்ப அட்ராக்டிவா இருக்கு!”
  • அனுபல்லவி: குருசாந்தனு ஜித குசும சரயுத சரஜ பவாம்புத வாகனாதி சரணுத பாத சுகுண குமார (நாணல் புதரில் அவதரித்த நற்குண குமாரனே! மன்மதனையே வென்றவனே! தேவர்கள் உமது பாதங்களை வணங்குகிறார்களே!)
  • சரணம்: காரக சூர பத்மாசுர தூலதகன பூதர சுத நந்தன தீர ஸ்ரீரகுவர பாகினேயாப்த உதாரக்ருணாகர தியாகராஜனுத (பார்வதி தேவியின் வீரமகனே! தாரகாசுரனையும், சூரபத்மனையும் பஞ்சுப் பொதியை எரிக்கும் நெருப்புபோல சாம்பலாக்கியவனே! ஸ்ரீரகுவரனின் (ராமரின்) அன்புமருமகனே!)

இங்கே தான் தியாகராஜர் தனது அசாத்திய புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறார்! முருகனைப் பற்றிப் பாடினாலும், அங்கே எப்படி தன் ஹீரோ ராமரைக் கொண்டு வரலாம் என்று யோசித்து, முருகனை ஸ்ரீரகுவர பாகினேயா அதாவது “ஸ்ரீ ராமரின் மருமகனே!” என்று கூப்பிடுகிறார். ராமா, நான் முருகனைப் பாடினாலும், அது உன்னோட சொந்தக்காரப் பையன்தான். அதனால, கணக்கு கரெக்டாதான்இருக்கு!” என்கிற ரேஞ்சில் ஒரு தெய்வீக லூப்ஹோல் (loophole) கண்டுபிடித்திருக்கிறார் தியாகராஜர்!

ஆறுபொறிகளின்அவதாரம் (வைகாசிவிசாகம்)

இன்று நாம் கொண்டாடும் வைகாசி விசாகத்திற்கும் இந்த பாடலின் சரணத்திற்கும் ஒரு செம கனெக்ஷன் இருக்கிறது. சரணத்தில் தியாகராஜர் முருகனை “தூல தகன” என்கிறார்—சூரபத்மனை பஞ்சுப் பொதி போல எரித்த நெருப்பு! சிவன் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்புப் பொறிகளின் வடிவம் தான் முருகன். அப்படி இருக்கும்போது, ‘சுப்ரதீபம்’ (பிரகாசமான விளக்கு) ராகத்தில் அமைந்த பாடலை இன்று பாடுவது முருகனுக்கு ஒரு ‘மியூசிகல் பர்த்டே கேண்டில்’ கொளுத்துவது மாதிரி அல்லவா?

கதைப்படி, சூரபத்மனும் தாரகாசுரனும் உலகத்தையே டார்ச்சர் செய்து கொண்டிருக்க, தேவர்கள் பயந்து போய் சிவனிடம் முறையிட, சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஆறு பயங்கரமான நெருப்புப் பொறிகள் பறந்து வந்தன.

அந்தப் பொறிகளை அக்னியும் வாயுவும் கங்கையிடம் கொடுக்க, கங்கை அதை ‘சரவணப் பொய்கை’ (சரஜபவ) என்ற குளத்தில் சேர்த்தது. குளத்தில் விழுந்த அடுத்த நொடி, அந்த ஆறு பொறிகளும் ஆறு அழகான குழந்தைகளாக மாறின. “ஒரே நேரத்துல ஆறு குழந்தைகளும் அழுகிறார்களே, எப்படி சமாளிக்கிறது?” என்று தேவர்கள் திகைத்தபோது, ஆறு கார்த்திகைப் பெண்கள் வந்து பாசத்தோடு வளர்த்தார்கள். அன்னை பார்வதி (பூதர சுத) ஓடோடி வந்து, அந்த ஆறு குழந்தைகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளி ஒரே அணைப்பாக அணைத்தாள். அவ்வளவுதான்! ஆறு குழந்தைகளும் இணைந்து ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட சண்முகனாக அவதரித்தார்!

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள், அப்புறம் ஒரே அணைப்பில் ஒரு குழந்தையாக மாறிய விசித்திரம்! தீமையையும் அறியாமையையும் அழித்து, நமக்கு ஞானத்தை வழங்கவே இந்த அழகுக் குமரன் அவதரித்தார்.

உலகெங்கும் உள்ள தமிழர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த வைகாசி விசாக நன்னாளில், நம் தலைக்குள் இருக்கும் ‘அகந்தை’ என்னும் சூரபத்மனை விரட்டுவோம். பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும், பஞ்சாமிர்தம் சாப்பிட்டும் இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், தியாகராஜரின் இந்த அரிய ‘மருமகன்’ பாடலையும் நினைத்துப் பார்ப்போம். முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கட்டும்; ஏனென்றால் ஞானத்தை மகிழ்ச்சியோடு தேடுபவர்களைத் தான் முருகனுக்கு ரொம்பப் பிடிக்கும்!

இந்த விசேஷ நாளில், தியாகையர் முருகனைக் குறித்து இயற்றிய சுப்ரதீப ராகத்தில் அமைந்த பாடலை திரு பாலமுரளி கிருஷ்ணா பாட, இங்கே கேட்கலாம்:

Before we dive into our spiritual and musical journey, let me share the secret of how this post actually came to be. It all started recently during the Chicago Tyagaraja Utsavam’s 50th-year Golden Jubilee celebrations. As part of the festivities, we were driving to attend a special Thiruppugazh event.

Suddenly, my daughter launched a missile from the back seat: ‘Appa, has Saint Tyagaraja composed any song on Lord Muruga? What is the connection between Thiruppugazh and Tyagaraja?’

Driving the car while secretly admiring myself as some grand Carnatic music enthusiast, I suddenly had absolutely no idea what to say. I started blinking like a broken car indicator light. What on earth is the connection between Tyagaraja and Muruga? Managing to gather myself, and to save my dignity as a father, I said, ‘Good question! We can think about that later. For now, let your focus ONLY be on the Thiruppugazh songs!’ I put extra emphasis on that ‘only.’

With that question continuously drilling into my brain, the moment I got home, I searched intensely with the help of Almighty Google. A rare musical treasure caught my eye. Not only that, but Vaikasi Visakam is emerging in just two days! Realizing this was practically a signal handed to me by the universe, I have put together this post for you, featuring both the story of Lord Muruga and the very song that saved my dignity.

When Rama’s Ultimate Fan Wrote a Song for Muruga

If you know Saint Tyagaraja, you know he was the ultimate, unyielding devotee of Lord Rama. He was so single-minded that if you asked him to compose a song on anyone else, he’d likely give you a polite but firm, “Thanks, but I’m exclusive with Ayodhya.” Yet, rules are meant to be broken when the inspiration is overwhelmingly beautiful. Enter the song “Varashikhi Vahana,” an absolute musical anomaly. It stands as Tyagaraja’s only known composition dedicated entirely to Lord Muruga.

It’s as if Tyagaraja looked at Lord Muruga riding His grand, divine peacock, and thought, “Alright, just this once, because that appearance is spectacular and those lotus eyes are hard to ignore.”

To make things even more exclusive, he chose an exceptionally rare rāgam named Supradipam (SupraDheepam), which literally translates to “The Brilliant, Auspicious Lamp.” The music evokes a bright, yearning spiritual luminescence.

Let’s look at what the saint actually wrote in this rare gem, broken down with a bit of modern context:

  • Pallavi: varashikhi vAhana vArija lOcana (Oh Lord who rides the divine, noble peacock! Oh lotus-eyed one!). This translates to “Hey Muruga, You’ve got the premium, top-tier model of a peacock, and Your eyes are absolutely stunning.”
  • Anupallavi: kuru shantanu jita kusuma sharayuta sharaja bhavAmbuda vAhanAdi saranuta pAda suguNa kumAra (Oh virtuous youth born in the reeds! Your feet are worshipped by the Devas! You who conquered Manmatha, the flower-arrowed god of love!) This means “You are the ultimate superstar kid born in a reed pool, so inherently charming that even the God of Love failed his vibe check against You.”
  • Charanam: tAraka shUra padmAsura tUla dahana bhUdhara suta nandana dhIra shrI raghuvara bhAginEyApta udAra ghrNAkara tyAgarAjanuta. This translates to “Oh brave son of Parvati! You who incinerated the demons Tarakasura and Soorapadman like a bale of cotton in a blazing fire! Oh beloved nephew of the noble Raghuvara (Rama)! You are the compassionate, generous one praised by Tyagaraja!”)

Hold the phone. Did you catch that? Tyagaraja is a genius marketer. Even when he is writing a song exclusively for Muruga, he manages to slide his favorite hero into the lyrics by calling Muruga “Shri Raghuvara Bhagineya”—the nephew of Lord Rama! It’s the ultimate spiritual loophole. “Look Rama, I’m singing to Muruga, but technically, I’m still praising Your extended family tree!”

The Birth of the Six Sparks (Vaikasi Visakam)

What makes this song exceptionally brilliant for Vaikasi Visakam today is how perfectly the lyrics and the rāgam match the calendar. As Tyagaraja explicitly points out in the Charanam, Muruga is the “tUla dahana”—the blazing fire that turned the demon Soorapadman into a pile of burnt cotton. And how did Muruga arrive? As six brilliant sparks of fire from Lord Shiva’s third eye! Singing a song in Supradipam (“The Brilliant Lamp”) today is basically the musical equivalent of lighting a massive birthday candle for Muruga’s birthday, Vaikasi Visakam.

The story behind this day is wild. The universe was being terrorized by a demon named Soorapadman. The Devas, tired of being pushed around, complained to Lord Shiva. Shiva opened His third eye and out popped six fiery sparks.

These sparks were so hot that Agni (the fire god) and Vayu (the wind god) had to carry them gingerly over to the Ganges, who dropped them into a holy pond called Saravana Poigai (sharaja bhava). The moment they hit the water, they transformed into six beautiful babies. To avoid a logistical babysitting nightmare, six Krittika maidens looked after them. When Goddess Parvati (bhUdhara suta) came along and gave them one giant, loving maternal hug, the six babies fused into one magnificent divine form with six faces and twelve hands—Lord Shanmukha.

Talk about a compact family package! He was born young, exceptionally handsome, and armed with ultimate wisdom (Gnana) to destroy ignorance.

Celebrated globally by Tamil communities, Vaikasi Visakam is the day we clear out our internal “ego-monsters” just like Muruga cleared out Soorapadman and Tarakasura. Devotees carry Kavadi, walk miles barefoot, and pour liters of milk for Abhishekam. So, whether you are listening to Tyagaraja’s clever shout-out to Rama’s nephew or enjoying some festive panchamirtham, remember to smile. Muruga is watching, and He likes His wisdom served with a side of joy!

On this auspicious day, you can listen here to the song composed by Saint Tyagaraja in praise of Lord Muruga, set to the rāgam Supradipam and beautifully rendered by Sri Balamuralikrishna:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *