Devotion General Literature

Day 31 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 31 நாள் 31

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே
.

வேதாந்த்: அபூர்வா, இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஆன்மீகத்துல இருக்குற ஒரு பெரிய “டெட்-எண்ட்” (Dead-end). ஒரு கட்டத்துல எல்லா அறிஞர்களும், புலவர்களும் பேசாம அமைதியாயிடுவாங்க. ஏன் தெரியுமா?

அபூர்வா: என்ன வேதாந்த், அருணகிரிநாதர் மாதிரி ஒரு வார்த்தை ஜாலக்காரரே பேசாம அமைதியாயிடுவாரா? ஏன், முருகர் அவரோட பேச்சை ‘மியூட்’ (Mute) பண்ணிட்டாரா?

வேதாந்த்: (சிரிக்கிறான்) இல்லடா! அந்த அனுபவம் அப்படி! அவர் சொல்றாரு, “செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்தது தான்”. சிவந்த வானம் போல ஜொலிக்குற அந்த வேலவன், அன்னைக்கு ஒரு விஷயத்தை எனக்கு புரிய வச்சான். அந்த அனுபவம் இந்த உலகத்துல இருக்குற எதோடயும் “ஒவ்வாதது” (Incomparable). எதோடயும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு தனி ரகசியம் அது!

அபூர்வா: சரி, அப்படி ஒரு சூப்பர் அனுபவம் கிடைச்சா அதை உடனே எல்லாரும் கேக்குற மாதிரி மைக் பிடிச்சு சொல்ல வேண்டியதுதானே? ஏன் ரகசியம்னு சொல்றாரு?

வேதாந்த்: அங்கதான் சிக்கலே இருக்கு. “அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்” – அந்த அனுபவம் யாருக்கு கிடைச்சதோ, அவங்களுக்குத்தான் அது என்னன்னு புரியும். “எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?” – அதை அனுபவிக்காத ஒருத்தருக்கு நான் எப்படி வார்த்தைகளால புரிய வைக்க முடியும்?

அபூர்வா: இது கொஞ்சம் கஷ்டமா இருக்கே! ஒரு சின்ன உதாரணம் சொல்லேன்?

வேதாந்த்: இப்ப ஒருத்தர் பிறவியிலேயே கண் தெரியாதவர்னு வச்சுக்கோ. அவருக்குப் போய் “சிவப்பு நிறம்”னா என்னன்னு உன்னால விளக்க முடியுமா? “அது தக்காளி மாதிரி இருக்கும்”னு சொன்னா, தக்காளிங்கிறது ஒரு வடிவம்னு நினைப்பாரே தவிர, அந்த ‘சிவப்பு’ங்கிற நிறத்தை அவரால உணர முடியாதுல? அதுபோலத்தான் கடவுள் அனுபவமும். அதை ருசிச்சவங்களுக்குத்தான் அந்த ருசி தெரியும்.

அபூர்வா: புரியுது வேதாந்த்! “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” அப்படின்னு சொல்லுவாங்களே, அது இதுதானா? அனுபவிச்சவன் அதைச் சொல்ல முடியாது, சொல்ல முயற்சி பண்றவன் இன்னும் அதை முழுசா அனுபவிக்கலன்னு அர்த்தமா?

வேதாந்த்: அருமையா சொன்ன! வார்த்தைகள் ரொம்ப சின்னது, ஆனா அந்த முருகனோட அருள் ரொம்பப் பெரியது. அதனாலதான் “நான் சொல்றதை விட, நீயே அதை அனுபவிச்சுப் பாரு”ன்னு அருணகிரிநாதர் நமக்கு ஒரு ‘ஓபன் இன்விடேஷன்’ (Open Invitation) கொடுக்குறாரு.

அபூர்வா: புரியுது வேதாந்த்! இன்னைக்கான பாடம் என்ன ?

வேதாந்த்:  இன்றைய Takeaway:

  1. மொழிக்கப்பால் இறைவன்: இறைவன் என்பது ஒரு தகவலல்ல (Information), அது ஒரு உணர்வு (Feeling). காதலை விவரிக்க முடியாது, அனுபவிக்கத்தான் முடியும். அதுபோலவே பக்தியும்.
  2. தனிப்பட்ட தேடல்: மற்றவர்கள் சொல்வதை நாம் அனுபவித்து அறிய முடியாது. நமக்கான அனுபவத்தை நாம் தான் தேடி உணர வேண்டும், என்று அருணகிரிநாதர் அழகாகச் சொல்லுகிறார்.

அபூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் முருகனைப் பத்தி நிறைய ‘விளக்கம்’ கேட்குறதை விட்டுட்டு, அந்த ‘ஒப்பிட முடியாத’ அனுபவத்துக்காக நான் காத்திருக்கப் போறேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) அந்த ‘காத்திருப்பு’ தான் உண்மையான தவம், அபூர்வா. அது கிடைக்குற அன்னைக்கு நீயும் மௌனமா சிரிப்ப! நாளைக்கு 32-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 31 Day 31

sevvaan uruvil thigazh vElavan andru
ovvaadhadhu ena uNarvith thadhuthaan,
avvaaRu aRivaar aRigindradhu alaal
evvaaRu oruvarku isaivip padhuvE
.

Vedaant: Apurva, today we are hitting a “Dead-end” in spirituality. It’s the point where all great saints, poets, and geniuses eventually go silent. Do you know why?

Apurva: Wait, even a master of words like Arunagirinathar goes silent? Did Murugha hit the “Mute” button on him or something?

Vedaant: (Laughs) Not quite! It’s just that the experience is so overwhelming. He says, “Sevvaan uruvil thigazh Velavan andru ovvaadhidhu ena unarvithidhu thaan”. The Lord, glowing like a deep crimson sunset sky, taught him something that day. He describes that experience as “Ovvaadhadhu”—meaning it is incomparable to anything else in this world.

Apurva: Okay, if he had such an amazing, out-of-the-world experience, shouldn’t he be shouting it from the rooftops so we can all learn? Why keep it a secret?

Vedaant: That’s the classic dilemma! He says, “Avvaaru arivaar arigindradhalaal”. Only those who have “tasted” it truly know it. Then he asks, “Evvaaru oruvarkku isaivippadhuve?” meaning “How can I possibly explain this to someone who hasn’t felt it?”

Apurva: I’m trying to wrap my head around this. Can you give me a simple example?

Vedaant: Think of it this way: If you were trying to explain the concept of “Red” to someone who has been blind since birth, could you do it? You might say, “It’s like a rose,” but they don’t know what a rose looks like. You might say “It’s warm,” but that’s a feeling, not a color. Words fail because color is an experience.

Apurva: Ah, I get it now! It’s like that famous saying: “Those who have seen it don’t speak, and those who speak haven’t truly seen it.” The experience is just too big for the mouth to handle!

Vedaant: Exactly. Words are tiny buckets, but Muruga’s Grace is a vast ocean. You can’t fit the ocean into a bucket. Arunagirinathar is basically giving us an “Open Invitation” to stop reading about it and start experiencing it for ourselves.

Apurva: Nice Vedaant. What’s today’s takeaway

Vedaant: Today’s Takeaway:

  1. Beyond Words: God is not a piece of information; He is a realization. You can’t describe love with a dictionary; you have to feel it. Devotion is the same.
  2. Personal Discovery: We shouldn’t settle for someone else’s description of the Divine. Arunagirinathar is encouraging us to seek our own experience, rather than just listening to stories about it.

Apurva: Got it, Vedaant! I’m going to stop looking for more “definitions” of Muruga and start waiting for that “Incomparable” experience myself!

Vedaant: (Laughs) That “waiting” is exactly what deep meditation is, Apurva. The day you get it, you’ll just smile in silence too. See you tomorrow for Verse 32!

Muruga Charanam!

One thought on “Day 31 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

Leave a Reply to BALASUBRAMANIAM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *