கண்ணன் அன்றும், இன்றும்…
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
1 – கண்ணன் பிறப்பு
அன்று: வசுதேவர்-தேவகியின் மகனாக, கண்ணன், சிறையில் பிறந்தான். வசுதேவர், உடனே அப்போது பிறந்த குழந்தைக் கண்ணனைத் தன் தலையில் சுமந்து, யமுனை ஆற்று வெள்ளத்தைக் கடந்து, கோகுலத்துக்கு எடுத்துச் சென்றார்.
இன்று: அம்மாக்கள், “Normal delivery-aa? C-section-aa? Epidural irukka?” என்று கேட்க, கண்ணனோ “Comprehensive Prison package la தான் born, boss!” என்பான். கூடவே, “அப்பா வசுதேவர் Delivery partner, Location: Kamsan Jail – High Security Wing.” என்ற தகவலும் தருவான். Post-delivery, Rainy night express transfer என்று வெள்ளம், மழை, காத்து, எல்லாத்தையும் skip பண்ணி “baby release” complete என்ற செய்தி கேட்ட, Amazon Prime, BlinkIt, Zepto போன்ற நிறுவனங்களின் CEOக்கள் எல்லாரும் வசுதேவரிடம், “Anna… நீங்க தான் top, fast delivery!” என்று தலை குனிந்து சொல்லி, தங்கள் நிறுவனத்துடன் Merge செய்ய சதித் திட்டம் தீட்டுவார்கள். #BornInPrison #EscapeModeON போன்ற ஹாஷ்டேக் வைரலாகி இருக்கும்.
2 – வெண்ணெய் திருடன்
அன்று: கண்ணன், ஆயர்பாடியில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, வெண்ணைய் திருடி சாப்பிட்டான்.
இன்று: கண்ணன் WhatsApp ஸ்டேட்டஸில் “#ButterLover” போட்டு, Zomato, Uber Eats மூலம் Dairy Farm subscription வைத்திருப்பான். Camera, CCTV வைச்சாலும், “Incognito mode”லே Butter Heist நடத்தி விடுவான். YouTube-லேயே “Top 10 Ways to Steal Butter” வீடியோ upload செய்து வைரலாக்கியிருப்பான்.
3 – பூதகி வதம்
அன்று: பூதகி என்ற அரக்கி கோகுலம் வந்து, அழகான பெண்ணாக மாறி, கண்ணனை விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றாள்.
இன்று: பூதகி, Instagram influencer மாதிரி “baby sitter” போல வந்து, கண்ணனை lift பண்ண முயலும் Criminal Nanny. ஆனால் கண்ணன், “”Delivery appல wrong item வந்தாச்சுன்னு நினைச்சுக்கோ!”-னு சொல்லி, COD மூலமாக, பூதகியின் கதையை முடித்திடுவார். Here, COD is not Cash on Delivery, but CONSUME ON DELIVERY !!
4 – காளிங்க நர்த்தனம்
அன்று: காளிங்கன் என்ற பெரிய பாம்பின் தலையில் கண்ணன் நடனம் ஆடி, கோகுலத்து மக்களைக் காப்பாற்றினான்.
இன்று: பெரிய பாம்பு, Python version 0.0001 போல வந்து யமுனையில் குடியேறும். கிராம மக்கள் “இந்த பாம்பு Google Maps-ல even street view-ல கூட தெரியுது!”ன்னு பயந்தபோது, கண்ணன் போவான் “Bro, அது snake இல்ல, Fiber cable under water! நான் troubleshoot பண்ணிடுறேன்.” என்று சொல்லி, கண்ணன், அந்தப் பாம்பு போன்ற Cable-களில் கால் வைத்து, நடனமாடி, RESET செய்து, கோகுலத்தில் எப்போதும் நெட் கனெக்ஷன் இருக்கும்படி செய்வான். Network reset ஆகிவிடும். எல்லாருக்கும் buffering ஆகாத சீரான network connection கிடைத்துவிடும்.
5 – குடையாகும் கோவர்த்தன மலை
அன்று: பெருமழைக்கு பயந்த கோகுலத்து மக்களைக் காப்பாற்ற, கண்ணன், கோவர்த்தன மலையைத் தன் விரல்களால் குடை போல் தூக்கினான்.
இன்று: கண்ணன், உடனே, வருண பகவானுக்கு whatsapp message அனுப்பி, cluttered cloud storage-ஐ remove செய்துவிடுவான். ஆயர்பாடி மக்களிடம் “Giant Umbrella Mode set செய்து விட்டேன், இனிமேல் தேவைக்கு அதிகமாக Rain வராது” என்று assurance கொடுத்திருப்பான்.
6. குருக்ஷேத்திரப் போர்
அன்று: குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியானான் கண்ணன். போர் மையத்தில் குழப்பமடைந்த அர்ஜுனனுக்கு, கீதை உரை போதித்தான்.
இன்று: கண்ணன் பாண்டவர்கள் பக்கம் CEO-வாக இருந்து, “Weapons are fine, but strategy தான் king”னு சொல்லும் Management Guru. போர் ஆரம்பிக்கப்போகும் போது, அர்ஜுனன் ‘மனச்சோர்வு’ (Monday morning depression) அடைந்து”எனக்கு இந்த வேலை வேண்டாம், வேலையை விட்டுடுறேன்”ன்னு resign letter கொடுக்கப்போகும்போது, கண்ணன் HR Manager மாதிரி வந்து, “சரி மாப்ளே, உன் role, உன் KPI, உன் life-goals எல்லாம் மறக்காம நினைச்சுக்கோ”ன்னு ஒரு threat warning கொடுத்து, Motivational TED Talk அளவுக்கு கீதை சொல்வான். அந்த கீதை LinkedIn-ல #Leadership #Mindset #CareerTips, #NoAttachment #NoExpectations ஹாஷ்டேக்கோட வைரல் ஆகும்.
இன்றும் கண்ணன் நமது வாழ்வை நிறைப்பவன்
பால் பாக்கெட் விலை ஏறினாலும், “அது வெண்ணையோட ஆசான்”ன்னு கண்ணனை நினைச்சு சிரிக்கலாம். Stress வந்தாலும், “கண்ணன் போல flute வாசிச்சுட்டு life-ஐ enjoy பண்ணலாம்”ன்னு நினைச்சு வாழலாம். கண்ணன் அன்றும், இன்றும், என்றும் மகிழ்ச்சியின் சின்னம், நகைச்சுவையின் முகவரி, மற்றும் வாழ்வியல் வழிகாட்டி. அப்போது வெண்ணெய் திருடினான், இப்போது நமது வெண்ணெய் போன்று குழைந்த வெள்ளை மனதைத் திருடுகிறான். Technology வந்தாலும், மனுஷனின் playful heart-க்கு கண்ணன் தான் “Original Influencer”. கண்ணன் சொன்ன மாதிரி – “உன் கடமையைச் சரியாகச் செய், முடிவு பற்றி கவலைப்படாதே”. மனசை வெண்ணெய் போலக் குழைவாய் வெள்ளையாய் வைப்போம் !!

ஆடிவரும் அழகனாம்
ஆயர்பாடி அமுதனாம்
பாடிவரும் பாவையரைப்
பகடிசெய்யும் குறும்பனாம் !
தேடிவரும் கோபியரைக்
கேலிசெய்யும் கோபனாம் !
சூடித்தந்த மாலை தரும்
கோதைக்கோ விந்தனாம் !
நாடிவரும் பக்தருக்கு
நாலும் செய்யும் நந்தனாம் !
தேரில்வரும் அருச்சுனனைத்
தேற்றிவிடும் தேவனாம் !
மாயமோகம் நீக்கும் பாதை
கீதை சொல்லும் சித்தனாம் !
பாரில் சுக வாழ்வுதரப்
பார்த்தனாகும் கிருஷ்ணனாம் !!
HAPPY KRISHNA JAYANTHI TO ALL
Awesome Mama…!!!
மிகவும் அழகான கற்பனை.
ரசித்தேன்.
பாடல் முத்தாய்ப்பு.
வாழ்த்துக்கள்.