Day 52 Kandhar Anubhuthi (Daily Divine Delight – Finale)
கந்தர் அனுபூதி – பாடல் 52 நாள் 52 (நிறைவுப் பாடல்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
வேதாந்த்: அபூர்வா, நாம சிகரத்துக்கு வந்துட்டோம். இதுதான் கடைசிப் பாடல். இதுவரைக்கும் நாம பார்த்த 51 பாடல்களையும் இந்த ஒரு பாட்டுக்குள்ள அருணகிரிநாதர் அடக்கிட்டாரு. இது வெறும் பாட்டு இல்ல, ஒரு ‘மகா மந்திரம்’.
அபூர்வா: ஆமா வேதாந்த், முதல் வரியே ரொம்ப ஆச்சரியமா இருக்கே! “உருவாய் அருவாய், உளதாய் இலதாய்”—ஒண்ணுக்கு ஒண்ணு ஆப்போசிட் (Opposite) விஷயங்களைச் சொல்றாரே?
வேதாந்த்: அங்கதான் முருகனோட தத்துவம் இருக்கு. அவர் ஒரு வடிவமாவும் இருக்காரு அதாவது உரு, அதே சமயம் வடிவமே இல்லாத சக்தியாவும் இருக்காரு அதாவது அரு. கண்ணுக்குத் தெரியுற பொருளாகவும் இருக்காரு (உளதாய்), ஆனா நம்ம கண்ணுக்குத் தட்டுப்படாத சூட்சுமமாகவும் இருக்காரு (இலதாய்).
அபூர்வா: வாவ்! அப்புறம் அந்த வர்ணனை… “மருவாய் மலராய்” அப்படின்னா?
வேதாந்த்: ஒரு பூவோட வாசம் தான் மரு. அது எப்படி அந்தப் பூவுக்குள்ளேயே மறைஞ்சு இருக்கோ, அந்த மாதிரி இந்த உலகத்துக்குள்ள அவர் மறைஞ்சு இருக்காரு. அதே சமயம் மலரைப் போலத் தெளிவாவும் இருக்காரு. அவர் ஒரு மணியைப் போல (Gem) உறுதியானவர், அந்த மணியில இருந்து வர்ற ஒளியைப் போலப் பரவி இருப்பவர்.
அபூர்வா: “கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்”—இது நம்ம வாழ்க்கையோட மொத்த சாரத்தையும் சொல்லுதுல்ல?
வேதாந்த்: ஆமா! கருவா (Embryo) உருவாகுறது அவர்தான், அந்தப் பிண்டத்துக்குள்ள உயிராவதும் அவர்தான். நாம அடைய வேண்டிய லட்சியமும் அதாவது கதி அவர்தான், நம்ம தலையெழுத்தை நிர்ணயிக்கிற விதியும் அவர்தான். ஆனா இதையெல்லாம் விட முக்கியமான வரி எது தெரியுமா? “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”
அபூர்வா: “குருவா வந்து எனக்கு அருள் செய்” அப்படின்னு முடிச்சிருக்காரா?
வேதாந்த்: ஆமா! “இவ்வளவு சொன்னியே… இதுல எதையும் என்னால புரிஞ்சுக்க முடியல முருகா. அதனால நீயே எனக்கு ஒரு குருவா (Teacher) வந்து, நேரடியா ஞானத்தைக் கொடுத்து, அருள் செய்”னு ரொம்ப எளிமையா, அழகா இந்த மகா காவியத்தை முடிக்கிறாரு.
அபூர்வா: அட்டகாசமா இருக்கு. எப்படி இப்படியெல்லாம் அவரால யோசிக்க முடியுது ?
வேதாந்த்: அது தான் அருணகிரிநாதரோட அற்புதம். சரி, இன்னைக்கான Takeaway:
- இறைவனின் முரண்பாடு (The Paradox of God):
இறைவன் “இதுவா? அதுவா?” என்பதல்ல;
“இதுவும்… அதுவும்” என்பவன்.
உருவமும் அருவமும், பௌதிகமும் ஆன்மிகமும்—
அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான இருப்பே இறைவன். - வாழும் இருப்பு (The Living Presence):
ஒரு நுண்ணிய கருவிலிருந்து
மாணிக்கத்தின் பேரொளிவரை,
இறைவன் இல்லாத இடம் ஏதும் இல்லை. - இறுதி வேண்டுகோள் (The Final Request):—
உயர்ந்த பிரார்த்தனை என்பது செல்வமோ சொர்க்கமோ அல்ல
குருகிருபை அதாவது குருவின் அருள் ஒன்றே!
இறைவன் தானே வந்து, வழிகாட்டும் போது தான்
உண்மையான அனுபூதி மலர்கிறது.
அபூர்வா: வேதாந்த், நம்பவே முடியல! நாம இன்னைக்கு கடைசிப் பாட்டான, 52-வது பாடலை முடிச்சுட்டோம். கிட்டத்தட்ட ரெண்டு மாசமா தினமும் முருகனோட அந்த வேலையும், அழகையும், தத்துவத்தையும் பத்திப் பேசிருக்கோம். எனக்கு இப்போ மனசுல ஒரு பெரிய நிறைவு வந்திருக்கு.
வேதாந்த்: (சிரித்துக்கொண்டே) ஆமா அபூர்வா, எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஆனா கவனிச்சியா? நாம ஆரம்பிச்சப்போ முருகனை ஒரு சிலையா, ஒரு தெய்வமா பார்த்தோம். ஆனா அருணகிரிநாதர் மெல்ல மெல்ல நம்மைக் கூட்டிட்டுப் போய், கடைசியில முருகனை நமக்குள்ளயே இருக்கிற ஒரு மகா ஒளியா காட்டிட்டாரு.
அபூர்வா: ஆமா! இந்தப் பயணம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா (Interesting) இருந்தது. முதல்ல பயத்தைப் போக்குறதுக்காக வேண்டினோம், அப்புறம் ஆசைகளை அறுக்கச் சொன்னோம், அப்புறம் அந்த ‘மௌனம்’ பத்திப் பேசினோம். கடைசியில “நீயே எனக்கு குருவா வந்துடு”ன்னு முடிச்சதுதான் ஹைலைட்!
வேதாந்த்: அதுதான் ‘அநுபூதி’. ‘அனுபவம்’னா வேற ஒரு பொருளை உணர்றது. ஆனா ‘அநுபூதி’னா அந்தப் பொருளாவே நாம மாறுறது. 52 நாளைக்கு முன்னாடி இருந்ததை விட, இப்போ உனக்குள்ள ஒரு சின்ன அமைதி வந்திருக்குன்னு தோணுதா ?.
அபூர்வா: கண்டிப்பா வேதாந்த்! முன்னாடி எல்லாம் ஒரு சின்ன பிரச்சனை வந்தா பதட்டப்படுவேன். இப்போ “மதி கெட்டு அற வாடி” பாட்டு ஞாபகம் வருது. “முருகன் இருக்கும்போது நான் ஏன் வீணா அழியணும்?”ங்கிற ஒரு தைரியம் வருது.
வேதாந்த்: சூப்பர்! அருணகிரிநாதர் நமக்காகச் செதுக்கி வைச்ச ஒரு பெரிய சொத்து இது. இனிமேல் எப்போவெல்லாம் உனக்கு வழி தெரியலையோ, அப்போ இந்த 52 பாடல்கள்ல ஏதாவது ஒரு பாட்டை மனசுல நினைச்சுப் பாரு… அந்த வேலவன் உனக்கு வழிகாட்டுவான்.
அபூர்வா: சரியாச் சொன்ன வேதாந்த், இத்தனை பாடல்களையும் கடந்து வரும்போது என் மனசுல ஒரு பெரிய அமைதி வந்துடுச்சு. “குருவாய் வருவாய்”னு கடைசில முடிக்கும்போது எனக்கே ஒரு சிலிர்ப்பு வருது.
வேதாந்த்: (சிரித்துக் கொண்டே) அதுதான் கந்தர் அநுபூதியோட சக்தி அபூர்வா. இத்தனை நாளும் நாம ஒரு புக்கைப் படிச்சு முடிக்கல! ஒரு புதுப் பார்வையைத் நமக்குள்ள திறக்க ட்ரைப் பண்ணியிருக்கோம். கந்தன் அருள் எப்பவும் நம்மோடு இருக்கட்டும்!
முருகா சரணம் !
முருகனின் அருளால், இன்று Daily Divine Delight தொடரில் கந்தர்அனுபூதி – 52-வது மற்றும் இறுதிப் பாடல் பகிரப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2026 முதல், தினமும் ஒரு பாடல் என்ற எளிய முயற்சியாக தமிழ் & ஆங்கிலத்தில் இந்தப் பயணம் நடந்தது. வாசித்தும், ஊக்கமளித்தும், மௌனமாகத் தொடர்ந்து வந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
இதில் ஒரு பாடலாவது, அமைதி அல்லது பக்தியைத் தந்திருந்தால், இந்த முயற்சி பூரணமானதே !
முருகன் அருள் அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்த பாதையைக் காட்டட்டும் !
Kandhar Anubhuthi – Verse 52 Day 52 (Final Verse)
uruvaay aruvaay, uLadhaay iladhaay,
maruvaay malaraay, maNiyaay oLiyaay
karuvaay uyiraay, gadhiyaay vidhiyaay
guruvaay varuvaay, aruLvaay guhanE !
Vedaant: Hello Apurva, we’ve reached the final Verse 52. This is the “Grand Synthesis.” Arunagirinathar takes everything he’s discussed in the previous 51 verses and condenses it into this one final prayer.
Apurva: The first line is so paradoxical, Vedaant. “Uruvaai Aruvaai, Uladhaai Iladhaai.” Form and formless? Being and non-being? How to understand this?
Vedaant: That’s the beauty of the Divine. He is with form (the statue we see), but He is also the formless energy behind it. He is “There” (Uladhaai) in everything you touch, but He is also “Not There” (Iladhaai) because He cannot be limited by any physical definition.
Apurva: And then the metaphors: “Maruvaai Malaraai”—Fragrance and the Flower?
Vedaant: Exactly. Like the scent (Maru) is hidden within the flower, He is hidden within the universe. He is the solid Gem (Mani) and also the radiating Light (Oli). He is the Embryo (Karu) that starts life and the Life-force (Uyir) that sustains it.
Apurva: The most powerful part feels like the third line: “Gadhiyaai Vidhiyaai.” Our Destination and our Fate.
Vedaant: Yes! He is the Goal we are moving toward (Gadhi) and the Law of Destiny (Vidhi) that guides our path. But look at the very last line—the “Grand Finale.”
Apurva: “Guruvaai varuvaai arulvaai Gugane!” Is Arunagirinathar asking Muruga to come as a Teacher?
Vedaant: Precisely. After 51 verses of deep philosophy, he says, “Lord, I can’t figure this all out by myself. I need a Guru. You, the dweller of the heart cave (Gugane), please come down as my Master and bless me with direct experience.”
Apurva: It’s such a humble ending. He doesn’t say “I know everything now”; he says “Please come and teach me.”. Simply superb !
Vedaant: That’s the beauty of Arunagirinathar, Apurva. Now let us dwell in to the final snapshot of the wisdom:
- The Paradox of God: God is not “Either/Or”; God is “Both/And.” Form and Formless, Matter and Spirit—He is the totality of existence.
- The Living Presence: From the tiny embryo to the massive light of a gem, there is nothing where He is not.
- The Final Request: The ultimate prayer is not for wealth or heaven, but for Guru-Kripa (the Grace of the Master). True realization only happens when the Lord Himself comes to guide us.
Apurva: Vedaant, I can’t believe it! We just finished the series with the last Verse 52. For nearly two months, we’ve talked about Muruga’s Spear, His beauty, and His deep philosophy every single day. I feel this incredible sense of completion.
Vedaant: (Smiling) I feel it too, Apurva. But did you notice the shift? When we started, we looked at Muruga as a deity in a temple, someone “out there.” But Arunagirinathar slowly took us by the hand and showed us that He is the Great Light living right inside us.
Apurva: Exactly! The 52 day journey was so fascinating. We started with prayers for protection, then moved to cutting our desires, then that profound “Great Silence.” And ending it with “Come as my Guru” was the perfect masterstroke.
Vedaant: That’s why it’s called Anubhuthi Apurva. While “experience” usually means experiencing an object, Anubhuthi means a realization where you become one with the Divine. I can see a certain stillness in you now that wasn’t there 52 days ago.
Apurva: You’re right Vedaant. Before this, I’d panic at the smallest problem. Now, verses like “Madhi kettu ara vaadi” flash in my mind. I tell myself, “Why should I perish in vain when the Lord of Grace is right here?” It gives me so much courage.
Vedaant: That’s the greatest inheritance Arunagirinathar left for us Apurva. From now on, whenever you feel lost or the world gets too noisy, just pick any one of these 52 verses and hold it in your heart. The Spear-bearer will handle the rest.
Apurva: The progression of this spiritual journey is deeply captivating, Vedaant. Ending it with “Come as my Guru” feels like a fresh beginning rather than a conclusion.
Vedaant: That is the secret of Anubhuth Apurva. You don’t “finish” this book; it starts living in you. May the Spear of Muruga always light your way!
Muruga Charanam!
By the grace of Lord Murugan, in the Daily Divine Delight series today I shared the
52nd and final verse of Kandhar Anubhuti. This one-verse-a-day journey began on Jan 1,2026
in Tamil and English.
Heartfelt thanks to everyone who read, encouraged,
or silently followed along. If even one verse brought a moment of clarity, peace, or devotion, this effort feels truly fulfilled.
May Lord Murugan bless us all with inner joy !

Awesome.7 Can we get all the 52 days in one file.🙏🙏🙏
Wow! What a magnificent conclusion to the series — and at the same time, a beautiful beginning for our own inner exploration. Kandhar Anubhuti carries profound philosophical depth, yet you presented this challenging subject in such a clear and accessible way. Each verse brought out the core essence and conveyed it through dialogue in a refreshingly unique manner. Words fall short in expressing my appreciation and gratitude. This series will remain with me forever. God bless you.
அருமையான தொடர். என்னால் இப்பத்தான் நல்லாவே அனுபூதியை உணர்ந்து பாட முடியுது. நன்றி ஐயா!
You took us through an amazing journey and experience . Thank you🙏🏽💕