Day 50 Kandhar Anubhuthi (Daily Divine Delight)
கந்தர் அனுபூதி – பாடல் 50 நாள் 50
தன்னந்தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ்சுடரே!
வேதாந்த்: அபூர்வா, 49-வது பாட்டுல “நாமும் முருகனும் ஒண்ணா கலக்குற” அந்த மகா நிலையைப் பத்திப் பேசினோம்ல? இப்போ அந்த நிலையை அடைஞ்ச அப்புறம் அருணகிரிநாதருக்கு ஒரு சந்தேகம் வருது. “இதை மத்தவங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்?”னு கேக்குறாரு.
அபூர்வா: ஏன் வேதாந்த்? அவ்வளவு அழகான அனுபவத்தை மத்தவங்களுக்கும் சொன்னா அவங்களும் சந்தோஷப்படுவாங்கல்ல? ஏன் சொல்ல முடியாதுன்னு தயங்குறாரு?
வேதாந்த்: ஏன்னா அது “தன்னம் தனி நின்றது”. அந்தப் பரம்பொருள் மத்த எல்லா உணர்வுகளையும் தள்ளிட்டு, ஒண்டியா, பிரம்மாண்டமா வந்து நிற்குது. அந்த அனுபவம் “தான் அறிய”—அதாவது, அதை அனுபவிச்சவனுக்கு மட்டுமே புரியுற ரகசியம். “இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”—இதை இன்னொருத்தருக்கு எப்படி வார்த்தையால புரிய வைக்க முடியும்? இப்போ உனக்கு ஒரு கனவு வருதுன்னா, அந்த உணர்வை நீ அப்படியே இன்னொருத்தருக்குத் தர முடியுமா? முடியாதுல்ல?
அபூர்வா: புரியுது வேதாந்த். “தேனைச் சாப்பிட்டவனுக்குத் தான் இனிப்பு தெரியும்”னு சொல்ற மாதிரி இது இருக்கு. அப்புறம் அந்த “விகிர்தா” அப்படின்னா என்ன அர்த்தம்? முருகனை ஏன் அப்படிச் சொல்றாரு?
வேதாந்த்: ‘விகிர்தன்’னா ‘இயல்புக்கு அப்பாற்பட்டவன்’னு அர்த்தம். உலகத்துல இருக்குற எந்த லாஜிக்குக்கும் (Logic) அடங்காதவன் முருகன். அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? “மின்னும் கதிர்வேல் விகிர்தா”—மின்னலைப் போல ஒளி வீசுற கதிர்வேலை உடையவர். அவரை நினைப்பவர்களோட “கின்னம்” அதாவது துன்பம் அனைத்தையும் வேரோடு பிடுங்கி எறிஞ்சுட்டு, நம்மைச் சுத்தி ஒரு கிருபை சூழ்ந்த சுடரா (ஒளியா) மாறி நிப்பாராம்.
அபூர்வா: வாவ்! துன்பத்தைப் போக்குற அந்த ஒளியை ஒருத்தர் உணர்ந்துட்டா, அப்புறம் அங்கே வேற பேச்சுகளுக்கு இடம் இருக்காதுன்னு சொல்ல வர்றாரா?
வேதாந்த்: கரெக்டா சொன்ன! “எனக்குக் கிடைச்சதை என்னால உனக்குத் தர முடியாது, நீயும் முருகனை நினை… அந்த ஒளியை நீயே உணரு” அப்படின்னு நம்மகிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைச்சுட்டு அருணகிரிநாதர் அடுத்த நிலைக்குப் போறாரு.
அபூர்வா: அருணகிரி இப்படி ப்ரில்லியண்ட்டா போட்டுத் தாக்கறாரே ! சரி இன்னைக்கு ஸ்னாப்ஷாட் என்ன ?
வேதாந்த்: இன்னைக்கு Takeaway:
- விவரிக்க முடியாத முழுமை (The Incommunicable Absolute): உண்மையான ஆன்மீக உணர்தல் என்பது தனிப்பட்டது. மொழியால் உணர்த்த முடியாதது. அது இறைவன் மனதைக் கடந்த அனுபவம்.
- தனித்துவமான குணப்படுத்துபவர் (The Unique Healer – விகிர்தன்): எந்த மருந்தாலோ அல்லது தர்க்கத்தாலோ குணப்படுத்த முடியாத ஆன்மீகத் துயரங்களை (Kinnam) அழிப்பதில் வல்லவர் ‘அருட்சுடர்’ முருகன்.
- அழைப்பு (The Invitation): இந்த 50-வது பாடல் ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கு ஒரு அழைப்பு: “என் வார்த்தைகளை மட்டும் படிக்காதீர்கள்; அவரை நினைவில் நிறுத்தி (Ninaivaar), அந்த ஒளியை நீங்களே உணருங்கள்”.
அபூர்வா: “இன்னொருத்தருக்குச் சொல்ல முடியாது”ன்னு சொல்லும்போதே எனக்கு அதை அனுபவிச்சுப் பாக்கணும்னு ஆர்வம் வருது வேதாந்த்!
வேதாந்த்: (சிரிக்கிறான்) அந்த ஆர்வம் தான் உன்னை 51-வது பாட்டுக்குக் கூட்டிட்டுப் போகும். நாளைக்கு அந்தப் பாடலைப் பார்ப்போம்!
முருகா சரணம் !
Kandhar Anubhuthi – Verse 50 Day 50
thannan thani nindradhu, thaan aRiya
innam oruvarkku isaivip padhuvO
minnum kadhirvEl vigirdhaa ! ninaivaar
kinnam kaLaiyum krupai soozh sudarE !
Vedaant: Hi Apurva, in the previous verse, we talked about the soul merging with Muruga like iron in a furnace. Now, in Verse 50, Arunagirinathar faces a beautiful dilemma: “How on earth do I explain this to anyone else?”
Apurva: Why is it a dilemma, Vedaant? If he’s discovered the ultimate secret of happiness, shouldn’t he share the details?
Vedaant: Because the experience is “Thannanthani nindradhu.” The Divine reality stands alone, singular and absolute, beyond all worldly context. He says it is “Thaan ariya”—something that is known only to the one experiencing it. Then he asks, “Innam oruvarkku isaivippadhuvuo?”—”Can I even make another person understand this through language?”
Apurva: It’s like listening to someone narrate a movie scene by scene, but never actually watching it. You get the story—but not the experience. That’s it, right?
Vedaant: Precisely. It’s a non-transferable realization. He then calls Muruga “Vigirtha.” This is a profound title meaning “He who is beyond all worldly norms and classifications.” This unique Lord with the shining Spear (Kathirvel) is a “Kirubai soozh sudar”—a flame of craze enveloped in Grace.
Apurva: And what happens when a devotee thinks of this Flame?
Vedaant: He says it dissolves the “Kinnam”—the deep-seated, hidden sorrows of the heart. Arunagirinathar is saying, “When this Divine Flame of Grace wraps around you and erases your pain, you enter a state of Bliss that is so intensely personal that words actually become a barrier to it.”
Apurva: So he’s saying that God isn’t a topic for debate or a lecture; God is a personal discovery that leaves you speechless?
Vedaant: Exactly. The map ends here, and the direct experience begins. Today’s takeaways:
- The Incommunicable Absolute: True spiritual realization is private. Language is a tool of the mind, but God is experienced beyond the mind.
- The Unique Healer (Vigirthan): Muruga is the “Flame of Grace” (Kirubai sudar) who erases “Kinnam”—the existential sorrows that no medicine or logic can cure.
- The Invitation: Verse 50 is an invitation to every seeker: “Don’t just read my words; remember Him (Ninaivaar) and feel the light for yourself.”
Apurva: By saying “I can’t tell you,” he’s actually making me, more curious to find out for myself, Vedaant!
Vedaant: (Laughs) That’s the sign of a true teacher! He’s pointing the way Apurva. See you tomorrow for the 51st verse!
Muruga Charanam!

Beautiful and powerful song, and your explanation is truly wonderful. God bless.