Devotion General Literature

Day 48 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 48 நாள் 48

ஆறு ஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறாவரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித் தவனே!

வேதாந்த்: அபூர்வா, இன்னைக்கு நாம ஒரு ‘ஸ்பிரிச்சுவல் மேட்ரிக்ஸ்’ (Spiritual Matrix) பத்திப் பேசப்போறோம். நாம இந்த உலகத்துல எதைப் பார்த்தாலும், கேட்டாலும் அது ஒரு கட்டமைப்புக்குள்ள தான் நடக்குது. அந்த கட்டமைப்பைத் தான் “ஆறாறையும்” (6×6 = 36) அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றாரு.

அபூர்வா: 36 தத்துவங்கள்னு நீ முன்னாடி எப்பவோ சொன்ன. ஆனா அதை ஏன் “ஆறாறு”ன்னு பிரிச்சுச் சொல்றாங்க? அதுல என்னென்ன இருக்கு?

வேதாந்த்: இது ரொம்ப ஆழமான விஷயம் அபூர்வா. 1. நிலம், நீர் மாதிரியான பூதங்கள், 2. அஞ்சு புலன்கள், 3. அஞ்சு கன்மேந்திரியங்கள், 4. அஞ்சு தன்மாத்திரைகள், 5. அந்தக்கரணம் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 6. அப்புறம் காலம், நியதி, கலை, வித்தைன்னு இப்படி 36 அடுக்குகள் நம்ம ஆன்மாவைச் சுத்தி ஒரு கவசம் மாதிரி மூடியிருக்கு. இதுதான் நம்மைக் கடவுளைப் பார்க்க விடாம தடுத்து, “நான் ஒரு மனுஷன், எனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கு”ன்னு நினைக்க வைக்குது.

அபூர்வா: ஓ! அப்போ நாம ஒரு 36 அடுக்கு ஜெயில்ல இருக்கோம்னு சொல்லு! அருணகிரிநாதர் அந்த ஜெயில்ல இருந்து வெளியே வரணும்னு துடிக்கிறாரு, இல்லையா?

வேதாந்த்: எக்ஸாக்ட்லி! “ஆறாறையும் நீத்து”—இந்த 36 தத்துவங்களையும் கழட்டிப் போட்டுட்டு, “அதன்மேல் நிலையை”—அதுக்கும் மேல இருக்குற அந்தச் சுத்தமான ஆன்ம நிலையை அடைய எனக்கு வழி இருக்கான்னு கேக்குறாரு. ஆனா இதுக்கு ஏன் சூரசம்ஹாரத்தை இழுக்குறாரு தெரியுமா?

அபூர்வா: சூரன் தேவர்களைச் சிறை வைச்சிருந்தாரு, அதை முருகன் உடைச்சாரு… அந்த கனெக்ஷன் (Connection) தானா?

வேதாந்த்: அதேதான்! சூரபத்மன் தேவர்களைச் சிறை வைச்சிருந்தப்ப, அந்தத் தேவர்கள் உலகம், பயத்தாலயும் கவலையாலயும் அப்படியே தவிச்சுக்கிட்டு இருந்தது. முருகன் வந்து அந்தச் சூரனை அழிச்சு, அந்தத் தேவர்கள் உலகத்தையே “குளிர்வித்தவனே”—அப்படினு அருணகிரி இந்தப் பாட்டுல சொல்றாரு. அதாவது ஒரு நிம்மதியான பெருமூச்சை விட வச்சாரு.

அபூர்வா: சூப்பர்! குளிர்வித்தவனே… அப்படின்னா cool guy. அன்னைக்கே “கூல்” அப்படிங்கற ஸ்லாங்லாம்  இருந்திருக்கு போல !

வேதாந்த்: நல்ல ஜோக் பண்ற அபூர்வா. அவர் என்ன சொல்றாருன்னா,  தேவர்களுக்கு நிம்மதி வாங்கிக் கொடுத்த முருகா அப்படிங்கிறாரு.

அபூர்வா: அப்போ “தேவர்களைச் சிறையில இருந்து மீட்ட மாதிரி, என்னை இந்த 36 தத்துவச் சிறையில இருந்து மீட்டு, என் மனசைக் குளிர்ச்சியாக்கு”ன்னு கேக்குறாரா ?

வேதாந்த்: ஆமா! சூரபத்மன் வெளியில இருக்குற எதிரி, ஆனா இந்த 36 தத்துவங்களும் நமக்குள்ள இருக்குற எதிரிகள். இந்த அகந்தை, புலன் ஆசைகள் எல்லாம் நம்ம மனசை எப்பவும் சூடா வச்சிருக்கு. முருகனோட வேல் அந்த அகந்தையை அழிச்சா மட்டும்தான், தத்துவங்களைக் கடந்த அந்த மகா அமைதி நமக்குக் கிடைக்கும்.

அபூர்வா: புரியுதுப்பா. இன்னிக்கி என்ன பாடம் ?

வேதாந்த்: இன்னைக்கு Takeaway:

  1. கட்டமைப்பை உடைத்தல்: நாம் வெறும் உடலோ, மனமோ, காலமோ அல்ல. இவை அனைத்தும் ஆன்மாவை மூடியிருக்கும் 36 அடுக்குக் கவசங்கள். இவற்றைக் கடப்பதே உண்மையான ஆன்மீகப் பயணம்.
  2. பேரமைதி: தத்துவங்களின் போராட்டம் ஓயும்போதுதான் மனது “குளிர்ச்சி” அடையும். அந்த அமைதியைத் தருபவர் சூரனை அழித்த வேலவன்.

அபூர்வா: செம வேதாந்த்! “நான்”ங்கிற அந்த 36-வது அடுக்கைக் கழட்டிப் போட்டாலே பாதிப் பிரச்சனை முடிஞ்சிரும் போல!

வேதாந்த்: (சிரிக்கிறான்) ஆமா! அந்த “நான்” தான் கடைசி ஜெயில் கதவு. அதை எப்படியாவது அவன் அருளால திறந்துட்டா, அப்புறம் எல்லாமே முருகன்தான் அபூர்வா! நாளைக்கு 49-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 48 Day 48

aaRu aaRaiyum neeththu adhanmEl nilaiyaip
pERaa adiyEn peRumaaRu uLadhO
seeRaavaru soor sidhaiviththu, imaiyOr
kooRaa ulagam kuLirvith thavanE !

Vedaant: Hi Apurva, today’s verse is about escaping the “Spiritual Matrix.” Everything we experience—smell, sight, thought, time—is part of a complex structure that Arunagirinathar calls the “Aaraaraiyum” (The 36 Layers).

Apurva: You mentioned these 36 Tattvas before, but why are they so significant? What are they exactly?

Vedaant: Think of them as the hardware and software of being human. They range from the physical (the 5 elements) to the sensory (the 5 senses), to the mental (mind, ego, intellect), and finally to cosmic constraints like Time (Kaala) and Fate (Niyati). These 36 layers wrap around our soul like a heavy suit of armor. They allow us to interact with the world, but they also trap us in the illusion of “I and Mine.”

Apurva: So, we are essentially living in a 36-layered prison? And Arunagirinathar is asking for a jailbreak?

Vedaant: Precisely. He asks, “Aaraaraiyum neethu”—”Can I strip away these 36 layers?” He wants to reach the “Adhanmel nilai”—the state that exists beyond all definitions, beyond time, and beyond the ego. But look at the leverage he uses to ask for this favor.

Apurva: He brings up the destruction of the demon Surapadman again, right? Why that specific event?

Vedaant: Because of the “Cooling Effect.” When Sura imprisoned the Devas, the entire celestial world was “burning” with anxiety, agitation, and friction. When Muruga destroyed Sura, He calls Muruga “Kulirvithavane”

Apurva: Wov. Arunagirinathar uses today’s gen-z term “cool guy”, to address Muruga ! He was probably the first, I think.

Vedaant: (Laughs) Not a bad joke Apurva. Here Arunagirinather uses that term to mean profound sense of relief and peace to celestial gods.

Apurva: I get the metaphor Vedaant! The enemy  isn’t just an external guy, he represents the friction of our own ego, right?

Vedaant: Exactly Apurva. Our attachment to these 36 Tattvas—our obsession with our senses and our “I self”—keeps our mind in a state of constant “heat” or stress. Arunagirinathar is saying, “O Lord, just as You liberated the Devas from their physical prison and cooled their world, use Your Spear to shatter my 36-layered mental prison and grant me that ultimate, cool stillness of the Soul.”

Apurva: Got it Vedaant. What’s today’s take away ?

Vedaant: Today’s Takeaway:

  1. The Ultimate Freedom: Liberation isn’t just going to a better place; it’s stripping away the 36 layers of “limited identity” (body, senses, ego, time) to realize the limitless Soul.
  2. From Heat to Coolness: Material life is full of “heat”—the friction of desire and ego. Divine Grace acts as a spiritual coolant, shattering our internal “demons” and revealing the profound stillness that exists beyond the “Matrix” of the 36 Tattvas.

Apurva: That’s mind-blowing, Vedaant. If I can just peel off that 36th layer—the “Ego”—I think most of my problems would just vanish!

Vedaant: (Laughs) Yes,that “I” is  the hardest door to unlock, but with Muruga’s Grace, it turns to dust. See you tomorrow for Verse 49!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *