Devotion General Literature

Day 44 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 44 நாள் 44

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்,
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே.

வேதாந்த்: அபூர்வா, நாம எப்போவுமே “அடுத்தது என்ன? அடுத்து என்ன வேணும்?”னு ஒரு ஓட்டத்துலேயே இருக்கோம்ல? இந்தப் பாட்டு அந்த ஓட்டம் நிக்கிற ஒரு கணத்தைப் பத்திப் பேசுது.

அபூர்வா: அந்த ஓட்டம் நிக்குமா வேதாந்த்? நமக்குத்தான் ஆசையே முடிவதில்லையே? ஒரு போன் (Phone) வாங்கினா அடுத்த மாடல் (Model) மேல ஆசை வருது. இது எப்படி நிக்கப்போகுது?

வேதாந்த்: அருணகிரிநாதர் அதைத்தான் “ஆசா நிகளம்”னு சொல்றாரு. ‘ஆசை’ங்கிற ஒரு இரும்புச் சங்கிலி நம்ம கால்களைக் கட்டிப் போட்டிருக்கு. அந்தச் சங்கிலி நம்மைக் கடவுள்கிட்ட போக விடாம இந்த உலகத்துலேயே நம்பளை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்கு. ஆனா, முருகனோட அன்பு நம்ம மேல படும்போது, அந்த இரும்புச் சங்கிலி என்ன ஆகுது தெரியுமா? “துகளாயின”—வெறும் தூசி மாதிரி நொறுங்கிப் போகுதாம்!

அபூர்வா: இரும்புச் சங்கிலி எப்படித் தூசியாகும்? ஆசையை அப்படித் தூளாக்க முடியுமா?

வேதாந்த்: முடியும்! ஆனா அது வெறும் ‘வில்-பவர்’ (Will power) மூலமா முடியாது. உன்னை விடப் பெரிய ஒரு சக்தியோட அன்பு வேணும். அதான் இங்க முருகனை “வள்ளியின் நேசன்”னு கூப்பிடுறாரு. ஒரு சின்ன குறத்திப் பொண்ணுக்காகத் தன் தெய்வத் தன்மையைக் கூடத் தியாகம் பண்ணிட்டு வர்ற அந்தப் ‘பேரன்பு’ நமக்குக் கிடைச்சா, உலகத்துல நாம வைச்சிருக்கிற இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் தானாவே அதோட மதிப்பை இழந்துடும்.

அபூர்வா: புரியுது வேதாந்த். ஒரு பெரிய வைரம் கிடைச்சா நமக்குக் கண்ணாடித் துண்டு மேல இருக்குற ஆசை போயிடும்ல? அந்த மாதிரி தானே வேதாந்த்?

வேதாந்த்: கரெக்டா சொன்ன அபூர்வா! அந்த ஆசைச் சங்கிலி உடைஞ்ச உடனே வர்றதுதான் “பேசா அநுபூதி”. ‘அநுபூதி’னா அனுபவம். ஆனா அது எப்பேர்ப்பட்ட அனுபவம்? வார்த்தைகளே இல்லாதது. அந்த இடத்துல “முருகா நீ அழகா இருக்க”ன்னு கூட உன்னால சொல்ல முடியாது. ஏன்னா அங்க “நீ”, “நான்”ங்கிற வித்தியாசமே இருக்காது.

அபூர்வா: வாவ்! வார்த்தைகள் தோக்குற அந்த இடம்தான் உண்மையான பக்தியா?

வேதாந்த்: ஆமா. எப்போ நாம ஆசைகளை உடைச்சுட்டு அமைதியாகுறோமோ, அப்போதான் அந்த தெய்வீக உணர்வு நமக்குள்ள பிறக்கும்.

அபூர்வா: ஓ! சரி..சரி… இன்னைக்கு என்ன பாடம்?

வேதாந்த்: இன்னைக்கு Takeaway:

  1. ஆசைச் சங்கிலி: ஆசை என்பது நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு விலங்கு. அதை நாமே உடைக்க முடியாது; இறைவனின் பேரன்பு மட்டுமே அந்த விலங்கை உடைச்சு தூளாக்கும்.
  2. மௌன அனுபவம்: உண்மையான ஆன்மீகம் என்பது வார்த்தைகளில் இல்லை. ஆசைகள் அற்றுப் போகும்போது பிறக்கும் அந்த மௌனமே உண்மையான “அநுபூதி.”

அபூர்வா: செம வேதாந்த்! “ஆசை சங்கிலி தூளாகட்டும்”னு நினைச்சுப் பாக்கும்போதே, ஒரு நிம்மதி வருதுப்பா.  

வேதாந்த்: (சிரிக்கிறான்) அந்த ஒரு நினைப்பே உன்னை அந்த ‘மௌன’ நிலைக்குக் கூட்டிட்டுப் போகும். நாளைக்கு 45-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 44 Day 44

thoosaa maNiyum thugilum punaivaaL
nEsaa murugaa ninadhu anbu aruLaal,
aasaa nigaLam thugaLaayina pin,
pEsaa anuboothi piRandhadhuvE

Vedaant: Hi Apurva—be honest. Do you ever feel like you’re just running in place? First you chase a better job, then a bigger house, then a nicer car. It never seems to end, right ?

Apurva: All the time, Vedaant! It feels like I’m constantly chasing “the next thing.” It’s exhausting. Does this verse offer an “off-switch”?

Vedaant: It does. Arunagirinathar uses a powerful term: “Aasaa Nigalam.” He calls desire a “shackle” or an iron chain. We think our desires make us free, but he says they actually bind us to a cycle of stress. But here’s the magic: when Muruga’s grace hits that chain, it becomes “Thukal”—it literally disintegrates into fine dust.

Apurva: Disintegrates into dust? That’s a bold claim. How do you just “turn off” desire like that?

Vedaant: You don’t “turn it off” with force. You outgrow it through a higher love. That’s why he addresses Muruga as the lover of Valli. Think about it: a Supreme God wandering in the woods for a simple tribal girl. That’s “Nesa” (Intense Love). When you start to feel even a fraction of that Divine love, your hunger for material validation just… snaps.

Apurva: I get it. It’s like when you fall in true love; suddenly, the expensive gifts don’t matter as much as the person. The higher emotion makes the lower greed irrelevant.

Vedaant: Exactly! And when those shackles turn to dust, you enter “Pesaa Anubhuthi.” Anubhuthi means realization, but Pesaa means “speechless.”

Apurva: “Speechless realization”? Why speechless?

Vedaant: Because the mind is the tool of lanugage, and the mind is full of desires. When desires vanish, the mind goes silent. In that silence, you don’t “think” about God; you experience God. You don’t say “Muruga is great” because there is no “you” left to say it. You are just part of that bliss.

Apurva: Whoa… that’s intense, Vedaant.

Vedaant: Yep..Yep.. Yep. Here is a Takeaway:

  1. The Weight of Wanting: Desires are not wings; they are shackles. We struggle to break them with logic, but they dissolve effortlessly when exposed to the warmth of Divine Grace.
  2. Silence is the Peak: Realization is not a lecture or a book; it is a “speechless experience.” When the “noise” of personal desire stops, the music of the Divine begins.

Apurva: That’s deep, Vedaant. Just thinking about my “desire shackles” falling apart makes me feel lighter already.

Vedaant: (Laughs) That’s the start of Anubhuthi. Keep that lightness with you. See you tomorrow for Verse 45!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *