Devotion General Literature

Day 38 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 38 நாள் 38

கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்
‘பரிவாரம்’ எனும் பதம் மேவலையே!
புரிவாய் மனனே! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

வேதாந்த்: அபூர்வா, இன்னைக்கு பாட்டுல அருணகிரிநாதர் முருகன்கிட்ட பேசல, அவரோட மனசுக்கிட்ட பேசுறாரு. நமக்கெல்லாம் ஒரு முக்கியமான “சைக்காலஜி” (Psychology) டிப்ஸ் கொடுக்குறாரு.

அபூர்வா: மனசுக்கிட்ட பேசுறாரா? என்ன சொல்றாரு? “மனசே, கொஞ்சம் அமைதியா இரு” அப்படின்னு சொல்றாரா?

வேதாந்த்: அதை விட ஆழமா சொல்றாரு! “புரிவாய் மனனே” – மனமே, இதை நல்லா புரிஞ்சுக்கோ. நாம எப்போவும் “நான், நான்”னு அகந்தையில ஆடுறோம்ல? அந்த அகந்தையை (Ego) “அடியோடும் அரிவாய்” – அதாவது வேரோடு வெட்டி எறியணும்னு சொல்றாரு.

அபூர்வா: அகந்தையை வெட்டுறது அவ்ளோ ஈஸி இல்லையே வேதாந்த்? அதுக்கு என்ன ஆயுதம் வேணும்?

வேதாந்த்: “பொறையாம் அறிவால்” – அதுதான் அந்த ஆயுதம். ‘பொறை’ அப்படின்னா ‘பொறுமை’ன்னு ஒரு அர்த்தம், ‘பூமி’ன்னு ஒரு அர்த்தம். பூமி மாதிரி எல்லாத்தையும் தாங்குற அந்தப் பொறுமையான அறிவை வச்சு உன் அகந்தையை அறுக்கணும்னு சொல்றாரு.

அபூர்வா: பொறுமையே ஒரு ஆயுதமா? சூப்பர்! ஆனா அகந்தை போயிட்டா அந்த இடத்துல என்ன வந்து சேரும்?

வேதாந்த்: அங்கதான் முருகன் வர்றாரு! “கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்” – கிரௌஞ்ச மலையைப் பிளந்த அந்த வீரமான வேலை உடைய முருகனோட “பரிவாரம்” அதாவது அடியவர் கூட்டம் அப்படிங்கிற பதவியை நீ அடைஞ்சுடு அப்படின்னு சொல்றாரு.

அபூர்வா: புரியுது! “நான் பெரிய ஆளு”ன்னு நினைக்காம, “நான் முருகனோட அடியவர் கூட்டத்துல ஒருத்தன்”னு நினைச்சாலே அந்த அகந்தை ஓடிடும்ல?

வேதாந்த்: கரெக்டா சொன்ன அபூர்வா! முருகனோட வேல் மலையைப் பிளக்குறது பெருசில்லை, நம்ம மனசுக்குள்ள இருக்குற அகந்தைங்கிற மலையைப் பிளக்குறதுதான் உண்மையான வெற்றி!

அபூர்வா: நம்ப ஈகோ, மலை மாதிரி. அதை வேரோட ஒழிக்கணும்னா, பொறுமைங்கிற ஆயுதம் வேணும், அதுக்கு அடியவர் கூட்டத்துல இருக்கணும்னு சொல்றார் தானே ?

வேதாந்த்: சரியாச் சொன்ன அபூர்வா. சரி, Takeaway:

  1. வேரோடு அறுத்தல்: அகந்தை என்பது ஒரு செடி மாதிரி, மேலோட்டமாக வெட்டினால் மீண்டும் வளரும். அதை ‘பொறுமை’ என்கிற அறிவால் வேரோடு எடுக்க வேண்டும்.
  2. பரிவார பக்தி: “நான்” என்று சொல்லும்போது அகந்தை வளர்கிறது. “நான் அவன் அடியவன்” என்று சொல்லும்போது அகந்தை அழிகிறது.

பூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் யாராவது என் அகந்தையைத் தூண்டுனா, உடனே ‘பொறுமை’ங்கிற கத்தியை எடுத்து அதை வெட்டிடுறேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) அதுதான் சரியான வழி! நாளைக்கு 39-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 38 Day 38

girivaay vidu vikrama vEL iRaiyOn
“parivaaram” enum padham mEvalaiyE
purivaay mananE ! poRaiyaam aRivaal
arivaay adiyOdum agandhaiyaiyE

Vedaant: Hello Apurva, today’s verse is a bit different. Arunagirinathar isn’t talking to Muruga; he is giving a pep talk to his own mind. It’s like a deep psychological masterclass.

Apurva: Talking to his own mind? What is he telling it? “Mind, please calm down”?

Vedaant: Even deeper! He says, “Purivaai manane”—”O Mind, understand this clearly.” He tells the mind to “Arivai adiyodum aganthaiyaiyai”—which means to “Cut down the ego from its very roots.”

Apurva: Cutting down the ego is easier said than done, Vedaant! What kind of “saw” or “axe” do you need for that?

Vedaant: He gives us the weapon: “Poraiyaam arivaal”. ‘Porai’ means patience or even ‘the Earth.’ He is talking about a wisdom that is as patient and enduring as Mother Earth. Use that patient wisdom to dismantle your ego.

Apurva: Patience as a weapon? That’s brilliant! But if the ego is gone, what takes its place?

Vedaant: That’s where the “Promotion” comes in! He talks about the Lord who threw His powerful Spear (Vickrama Vel) to split the mountain. He says, aim for the status (Padham) of being part of Muruga’s “Parivaaram”—His group of humble devotees.

Apurva: I get it! Instead of trying to be the “Boss” of our own little world, we should strive to be a simple servant in Muruga’s world. That’s the ultimate ego-killer.

Vedaant: Exactly. Muruga’s Spear splitting a physical mountain is one thing, but splitting the “Mountain of Ego” inside our hearts is the real miracle! Takeaway:

  1. Root Out the Ego: Ego is like a weed; if you just trim the top, it grows back. Use “Patient Wisdom” to dig it out from the roots.
  2. Shift the Identity: When we say “I am the doer,” ego grows. When we say “I am a part of His circle of devotees,” the ego naturally dissolves into humility.

Apurva: Got it, Vedaant! Next time my ego tries to act up, I’ll just pull out my “Patience-Sword” and chop it down!

Vedaant: (Laughs) That’s the spirit! Use that wisdom to stay grounded. See you tomorrow for Verse 39!

Muruga Charanam!

One thought on “Day 38 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

  1. Very nicely explained the meaning of this song How getting rid of ego bring the God in you as a conversant. Great Sekar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *