Day 37 Kandhar Anubhuthi (Daily Divine Delight)
கந்தர் அனுபூதி – பாடல் 37 நாள் 37
‘நாதா! குமரா! நம!’ என்று அரனார்
ஓதாயென ஓதியது எப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா! குறமின் பத சேகரனே!
வேதாந்த்: இன்னைக்கு பாட்டுல ஒரு செம ‘இன்ட்ரஸ்டிங்’ (Interesting) விஷயம் இருக்கு அபூர்வா! உலகத்துக்கே குருவான அந்த சிவபெருமான், கை கட்டி வாய் பொத்தி ஒருத்தர்கிட்ட பாடம் கேட்டாரே, அந்த ரகசியத்தைப் பத்தி அருணகிரிநாதர் கேக்குறாரு.
அபூர்வா: ஓ! அது எனக்குத் தெரியும். சுவாமிமலையில முருகன் தன் அப்பா சிவபெருமானுக்கே ‘ஓங்கார’ பொருளை உபதேசிச்சார்ல? அதானே?
வேதாந்த்: கரெக்ட்! ஆனா அருணகிரிநாதர் இங்க அதை எப்படி வர்ணிக்கிறாரு பாரு… “நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?”. அதாவது, “நாதனே! குமரனே! உனக்கு நமஸ்காரம்”னு சொல்லி, “எனக்கு அந்தப் பொருளை உபதேசி”னு சிவன் கேட்டாரே… அப்படி அவர் கேட்ட அந்தப் ‘பொருள்’ (உண்மை) என்ன? அதை எனக்கும் சொல்லக்கூடாதான்னு முருகன்கிட்டயே கேக்குறாரு.
அபூர்வா: வாவ்! சிவனே கேட்ட அதே ரகசியத்தை இவரும் கேக்குறாரு! ஆனா முருகனைப் புகழ்ற விதம் ரொம்ப ஆச்சரியமா இருக்கே? “வேதா முதல் விண்ணவர் சூடுமலர் பாதா” – பிரம்மா முதலான தேவர்கள் எல்லாம் உன் பாதத்துல விழுந்து வணங்குறாங்கன்னு சொல்றாரு… ஆனா அடுத்த வரியில…
வேதாந்த்: அங்கதான் முருகனோட எளிமை இருக்கு! “குறமின் பதசேகரனே” – குறவர் குலத்துல பிறந்த வள்ளி தேவியோட பாதங்களைத் தன் தலையில தாங்குறாராம் முருகன்!
அபூர்வா: என்னது? தேவர்கள் எல்லாம் முருகனோட பாதத்தைத் தலையில வச்சு வணங்குறாங்க, ஆனா முருகனோ வள்ளியோட பாதத்தைத் தன் தலையில தாங்குறாரா? இது என்ன ஒரு முரண்பாடு!
வேதாந்த்: இதுதான் பக்தியோட வலிமை! பக்தனுக்குக் கட்டுப்பட்டவன் தான் கடவுள்னு காட்டத்தான் இப்படிச் சொல்றாரு. “அப்பாவுக்கு உபதேசித்த ஞானாசிரியனே! தேவர்கள் போற்றும் தேவனே! ஆனா தன் பக்தையான வள்ளிக்கு அடிமையானவனே! அந்தப் பெரிய ரகசியத்தை எனக்கும் சொல்லிக் கொடு”ன்னு வேண்டுறாரு.
அபூர்வா: ஓஹோ! அருணகிரியார், ரொம்ப ஸ்மார்ட்டா கேக்கறாரே!
வேதாந்த்: ஆமா ஆபூர்வா. இன்னைக்கு Takeaway:
- ஞானத்தின் உச்சம்: சிவபெருமானுக்கே குருவாக இருக்கும் முருகனிடம், அந்தப் பிரணவப் பொருளைக் கேட்பது நம் அறிவைத் தெளிவாக்கும்.
- அன்புக்குக் கட்டுப்பட்டவன்: கடவுள் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல, அவர் அன்புக்கு (வள்ளிக்கு) மட்டுமே கட்டுப்பட்டவர்.
அபூர்வா: ஓகே வேதாந்த்! சிவனே கத்துக்கிட்ட அந்தப் பாடம் எனக்கும் வேணும்னு நானும் முருகன்கிட்ட கேக்கப்போறேன்!
வேதாந்த்: (சிரிக்கிறான்) சூப்பர்! அந்தப் பொருளை அவர் உனக்குள்ளேயே உணர்த்துவார். நாளைக்கு 38-வது பாட்டுல சந்திப்போம்!
முருகா சரணம் !
Kandhar Anubhuthi – Verse 37 Day 37
“naadhaa ! kumaraa ! nama!” endru aranaar
Odhaay ena Odhiyadhu epporuL thaan
vEdhaa mudhal viNNavar choodum malar
paadha ! kuRamin padha sEkaranE !
Vedaant: Hi Apurva, today’s verse deals with a very “elite” secret. It’s about that moment when Lord Shiva—the Guru of the entire universe—stood like a student with his mouth covered, listening to a lesson.
Apurva: Oh, I know this story! It’s about Muruga explaining the meaning of the Pranava Mantra (Om) to His father, Shiva, at Swamimalai, right?
Vedaant: Exactly! But look at how Arunagirinathar frames it. He asks: “Naadha Kumara Nama endru Aranaar odhaai ena odhiyidhu epporul thaan?”. He’s asking, “What exactly was that ‘Truth’ (Porul) that Shiva begged Him to teach Him, calling Him ‘Master’ and ‘Kumara’? Won’t You tell me that same secret?”
Apurva: Wow! He’s asking for the same VIP lesson that Shiva got! But I love the contrast in the next lines. He says Brahma and all the Devas wear Muruga’s flower-like feet on their heads… and then what?
Vedaant: Here comes the twist! “Kuramin paadha-sekharane”. While the Gods hold Muruga’s feet on their heads, Muruga holds the feet of Valli (the tribal girl) on His head!
Apurva: What? The Supreme Lord who is worshiped by the Creator Himself, is carrying the feet of His devotee Valli on His crown? That’s unbelievable!
Vedaant: That’s the beauty of devotion, Apurva. It shows that God is a slave to His devotees’ love. He’s saying, “O Master who taught Shiva! O Supreme Lord of the Devas! O Lover who bows to Valli! Please grant me that same secret wisdom.”
Apurva: I see. Arunagiri’s approach is very smart !
Vedaant: Yes Apurva. Today’s Takeaways:
- The Ultimate Secret: Muruga is the “Guru of Gurus.” Asking Him for the same wisdom He gave Shiva is a plea for the highest spiritual realization.
- Love Rules God: Power and status (like the Devas) can only reach His feet, but pure, unconditional love (like Valli’s) can rule over His head.
Apurva: Got it, Vedaant! If Shiva needed that lesson, I definitely need it too. I’m going to ask Muruga for that “Secret Truth” today!
Vedaant: (Laughs) He will reveal it within your own heart. See you tomorrow for Verse 38!
Muruga Charanam!
