Devotion General Literature

Day 33 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 33 நாள் 33

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே! மலை கூறிடு வாகையனே. 

வேதாந்த்: இன்னைக்கு பாட்டுல ஒரு முக்கியமான உண்மையை அருணகிரிநாதர் புரிய வைக்கிறாரு, அபூர்வா. நாம நிறையப் படிக்கிறோம், நிறையத் தகவல்களைச் சேமிக்கிறோம். ஆனா ஒரு கட்டத்துல அந்த அறிவே நமக்கு ஒரு பெரிய குழப்பத்தைக் கொடுத்துருமாம்!

அபூர்வா: என்ன வேதாந்த் சொல்ற? படிச்சா அறிவுதானே வளரும்? அது எப்படி குழப்பத்தைக் கொடுக்கும்?

வேதாந்த்: “கலையே பதறிக் கதறி” அப்படின்னு சொல்றாரு. அதாவது, நாம படிச்ச கலைகளும், சாஸ்திரங்களும் ஒரு கட்டத்துல எது உண்மைன்னு தெரியாம நம்ம தலைக்குள்ள கதறிப் பதறுமாம். அது ஒரு பெரிய கடல் அலை (தலையூடு அலையே) மாதிரி நம்ம மனசைக் குடையும்னு சொல்றாரு.

அபூர்வா: ஆமா வேதாந்த்! பல சமயம், இதைப் படிக்கவா, அதைப் படிக்கவான்னு குழம்புறது உண்டு. ஆனா இதுக்குத் தீர்வு என்ன? அந்த அலை எப்போ அடங்கும்?

வேதாந்த்: “அதுவாய் ஆய்விடவோ” – அந்த எல்லா அறிவையும் தாண்டி, எது உண்மையான அறிவோ, அந்தப் ‘பரம்பொருளாகவே’ நான் எப்போ மாறுவேன்? அப்படின்னு கேக்குறாரு. முருகனை எப்படி வர்ணிக்கிறாரு பாரு… “வேடர்குலப் பிடி தோய் மலையே”. வேடர் குலத்துல வந்த, பெண் யானை போன்ற வள்ளியைத் தழுவி நிக்கிற மலை போன்றவனே!

அபூர்வா: வள்ளியை “பிடி” அதாவது பெண் யானை அப்படின்னு சொல்றது புதுசா இருக்கே! ஆனா முருகனை ஏன் மறுபடியும் “மலை”ன்னு சொல்றாரு?

வேதாந்த்: ஏன்னா மலைங்கிறது அசைக்க முடியாதது. “மலை கூறிடு வாகையனே” – அப்படின்னா கிரௌஞ்ச மலையைப் பிளந்து வெற்றி வாகை சூடியவனே! அப்படின்னு அர்த்தம். “அப்படிப்பட்ட வலிமையான நீ, என் தலைக்குள்ள நடக்குற இந்த வீணான தர்க்கங்களையும், குழப்பங்களையும் நீக்கி, உன்னோட அந்த அமைதியான ‘அனுபூதி’-எனக்குக் கொடு”ன்னு கேக்குறாரு.

அபூர்வா: ஓஹோ. அப்ப இன்னிக்கி என்ன Takeaway ?

வேதாந்த்: இன்னைக்கு Takeaway:

  1. கல்விப் பதற்றம்: வெறும் புத்தக அறிவு மட்டும் நம்மை நிம்மதி அடையச் செய்யாது. அது தலைக்குள் அலை போலக் குழப்பத்தையே தரும்.
  2. நேரடி அனுபவம்: முருகனை ஒரு மலை போல நம் மனதிற்குள் நிலைநிறுத்தினால், தேவையற்ற தர்க்கங்களும், சாஸ்திரக் குழப்பங்களும் மறைந்து, ஒரு அமைதியான ‘அனுபூதி’ பிறக்கும்.

அபூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் நான் ரொம்பப் படிச்சு என் தலையைக் குழப்பிக்காம, முருகனை நினைச்சு மனசை ‘சைலன்ட்’ (Silent) பண்ணப் பார்க்குறேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) அதுதான் பெஸ்ட் ஸ்டைல்! அறிவு அலையா வராம, அமைதியா மாறும்போது முருகன் அங்க வந்துடுவாரு. நாளைக்கு 34-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 33 Day 33

kalaiyE padhaRi kadhaRi thalaiyoodu
alaiyE padumaaRu adhuvaay vidavO
kolaiyE puri vEdar kulap pidi thOy
malaiyE ! malai kooRidu vaagaiyanE

Vedaant: Today’s verse deals with a very modern problem, Apurva —”Information Overload.” Arunagirinathar explains how even religious studies and sciences can sometimes lead to more confusion instead of clarity.

Apurva: Wait Vedaant, I thought the more you study, the smarter you get! How can “knowledge” be a problem?

Vedaant: He says, “Kalaiye padhari kadhari”. He means that all the arts (Kalai) and scriptures we study can eventually start “shouting” inside our heads, making us anxious. He compares it to ocean waves crashing inside the brain (Thalaiyoodu alaiye).

Apurva: Ok. Now I get that. Sometimes you read so many different opinions, that you don’t know what to believe anymore. So.. how do we stop these waves?

Vedaant: He asks, “Adhuvaai aaividavo”. He’s asking, “When will I stop just reading about the Truth and actually become the Truth?” He then calls out to Muruga: “Vedarkula pidi thoy malaye”. He describes Muruga as a sturdy mountain embraced by Valli, who is like a majestic female elephant (Pidi).

Apurva: Calling Valli a “female elephant” is such a unique imagery! But why compare Muruga to a mountain again?

Vedaant: Because a mountain is unshakable. He says, “Malai kooridu vaagaiyane”—the victorious one who split the mountain (Krauncha). He’s saying, “O Lord who broke the mountain of ego, please break through this mountain of confusing thoughts in my head, and let me experience You directly!”

Apurva: I see! He’s moving from “Theory” (the arts/scripts) to “Practical” (Direct Experience). What is the takeaway ?

Vedaant: The Takeaway:

  1. Intellectual Anxiety: Accumulating information isn’t the same as gaining wisdom. Too much “book knowledge” without experience can create mental turbulence like stormy waves.
  2. The Unshakable Focus: When you focus on Muruga (the Mountain), the noisy waves of the mind settle down. The goal is to move from “knowing about God” to “being one with God.”

Apurva: Got it, Vedaant! Instead of overthinking and letting my brain become a “stormy ocean” of info, I’ll try to keep it steady like a mountain!

Vedaant: (Laughs) That’s smart. When the noisy waves of the mind stops, Muruga’s presence becomes clear. See you tomorrow for Verse 34!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *