Devotion General Literature

Day 29 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 29 நாள் 29

ஆனா அமுதே! அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யான் ஆகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே. 

வேதாந்த்: அபூர்வா, இன்னைக்கு பாட்டுதான் இந்த மொத்த நூலோட ‘கிளைமாக்ஸ்’ (Climax). அருணகிரிநாதர் தனக்குள்ள நடந்த ஒரு மகா அதிசயத்தைச் சொல்றாரு. இதை வார்த்தையால விவரிக்கவே முடியாதுன்னு அவரே தத்தளிக்கிறாரு.

அபூர்வா: விவரிக்க முடியாத அதிசயமா? என்ன வேதாந்த், முருகர் நேர்ல வந்து விஸ்வரூபம் காட்டினாரா?

வேதாந்த்: அதை விடப் பெரிய விஷயம்! “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது” – அப்படின்னு சொல்றாரு. அதாவது, “நான், என்னோடது, எனக்குத் தெரியும்” அப்படிங்கிற அந்த “யான்” (Ego) அப்படிங்கிற என்னையே, அவர் அப்படியே முழுசா முழுங்கிட்டாரு!

அபூர்வா: என்னது? முருகர் அருணகிரிநாதரை முழுங்கிட்டாரா? இது என்ன ஏதும் ‘ஹாரர்’ (Horror) படக் கதையா இருக்கு? “யான்” போயிட்டா அப்புறம் அங்க யாரு இருப்பா?

வேதாந்த்: (சிரிக்கிறான்) அங்கதான் ட்விஸ்ட்! நான் மறைஞ்ச இடத்துல, வெறும் “தான்” (God/The Self) மட்டும் தான் இருந்துச்சாம். அந்த பரம்பொருள் மட்டும் தான் அங்க மிஞ்சி நின்னுச்சு. ஒரு உப்புப் பொம்மை கடல்ல குதிச்சா அதுவும் கடலாவே மாறிடும்ல? அந்த மாதிரி அவரோட ஆன்மா முருகனோட ஒண்ணா கலந்துருச்சு.

அபூர்வா: வாவ்! அதான் “தற்பரமே” அப்படின்னு சொல்றாரா? ஆனா அது எப்படி இருந்துச்சுன்னு ஏன் அவரால சொல்ல முடியல?

வேதாந்த்: “நவிலத் தகுமோ” – அப்படின்னா “இதைச் சொல்ல முடியுமா? விவரிக்க முடியுமா?”ன்னு கேக்குறாரு. இனிப்புச் சுவையை அனுபவிக்கலாமே தவிர, அந்தச் சுவை இதுதான் அப்படினு டிஃபைன் பண்ண முடியாதுல்ல.  அதைப் போல, முருகனை “ஆனா அமுதே” (தெவிட்டாத அமுதம்), “ஞானாகரனே” (ஞானத்தின் இருப்பிடம்) அப்படின்னு அட்ரஸ் பண்ணிட்டு, அருணகிரியார், தானாய் நிலை நின்ன அனுபவத்தை  “நவிலத் தகுமோ?” அப்படினு வியந்து சொல்றாரு.

அபூர்வா: புரியுது வேதாந்த்! “நான்” மறைஞ்சு “நீ” மட்டும் நிக்கிற அந்த நிலைதான் உண்மையான ‘அனுபூதி’ (Direct Experience), அப்படினு சொல்றாருனு புரிஞ்சுக்கலாமா.

வேதாந்த்: ஆஹா, சரியாச் சொன்ன அபூர்வா!இன்றைக்கான Takeaway:

  1. அகந்தை அழிப்பு: “நான்” என்கிற எண்ணம் இருக்கும் வரை இறைவனை உணர முடியாது. அந்த “நான்” மறையும்போதுதான் இறைவன் வெளிப்படுவார்.
  2. சொல்லொணா அனுபவம்: உண்மையான ஆன்மீக அனுபவம் என்பது பேச்சைக் கடந்தது. மௌனத்தில் மட்டுமே அந்தப் பேரானந்தத்தை உணர முடியும்.

அபூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் நான் “நான் செஞ்சேன், எனக்குத் தெரியும்”னு, ‘சீன்’ போட்டுட்டு இருக்காம, அந்த “நான்”-ஐ முருகன்கிட்ட கொடுத்துடப் போறேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) அது நடந்தா நீயும் ஒரு ‘அருணகிரிநாதர்’தான்! நாளைக்கு 30-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 29 Day 29

aanaa amudhE ! ayil vEl arasE;
nyaanaa karanE navilath thagumO
yaan aagiya ennai vizhungi, veRum
thaanaay nilai nindradhu, thaRparamE
.

Vedaant: Hello Apurva, this is the “Climax” of the entire work. Arunagirinathar describes a spiritual explosion that happened inside him. He’s struggling because he says it’s impossible to put into words.

Apurva: Impossible to describe? Did Muruga appear in some giant cosmic form or something?

Vedaant: Even bigger! He says: “Yaanagiya ennai vizhungi verum thaanai nilai nindradhu”. It means, “He swallowed the ‘Me’ who thought I was ‘I’, and only ‘He’ remained.”

Apurva: Wait… Muruga “swallowed” him? Is this some kind of spiritual horror story? If the “I” is gone, who is left to tell the story?

Vedaant: (Laughs) That’s the divine mystery! When the ego (the “I”) is swallowed, only the Supreme Reality (Thaan) remains. Imagine a salt doll jumping into the ocean to measure its depth. The doll becomes the ocean! There is no “doll” left to come back and report.

Apurva: Wow! So that’s why he calls it “Tharparame” (The Supreme Self). But why can’t he describe the feeling?

Vedaant: “Navilath Thagumo” — this means he is asking, “Can this be put into words? Can it even be described?”. Just as you can experience the taste of sweetness but cannot fully define exactly what that taste is, it is the same here. Addressing Lord Muruga as “Aanaa Amudhe” (Insatiable Nectar) and “Gnanaagarané” (The Abode of Wisdom), Arunagirinathar wonders in amazement at the state of being where he lost himself, asking, “Can this be expressed?”.

Apurva: I understand, Vedaant! Should we understand this as him saying that the state where “I” (the ego) disappears and only “You” (the Divine) remains is the true ‘Anubhuti’ (Direct Experience)?.

Vedaant: Aha, well said, Apurva! Today’s takeaway:.

  1. The Ego Eclipse: As long as the “I” (ego) is standing in front, you cannot see the Light. When the “I” is swallowed by Grace, only the Divine remains.
  2. Beyond Words: True spiritual experience is “ineffable”—it cannot be described. It is a silent realization where the seeker becomes the sought.

Apurva: Got it, Vedaant! From now on, instead of saying “I did this” and “I know that,” I’ll try to let Muruga “swallow” my ego a bit!

Vedaant: (Laughs) If that happens, you’ve reached the goal! See you tomorrow for Verse 30!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *