Devotion General Literature

Day 36 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 36 நாள் 36

விதிகாணும் உடம்பை விடா வினையேன்,
கதிகாண, மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல்வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுரபூ பதியே! 

வேதாந்த்: அபூர்வா, இன்னைக்குப் பாட்டுல அருணகிரிநாதர் ஒரு பெரிய உண்மையை உடைக்கிறாரு. நாம எல்லாரும் நம்ம உடம்பைப் பராமரிக்கிறதுலயே பாதி நேரத்தைச் செலவிடுறோம்ல? அதைப்பத்தித்தான் இன்னைக்குப் பேச்சு.

அபூர்வா: ஆமா வேதாந்த், ஜிம்முக்குப் போறோம், டயட் (Diet) இருக்கோம், அழகாத் தெரியணும்னு நினைக்கிறோம். இதுல என்ன தப்பு?

வேதாந்த்: தப்பில்லை, ஆனா அதுவே கதி-னு கிடக்குறது தான் தப்பு. “விதிகாணும் உடம்பை விடா வினையேன்” – அப்படின்னா, விதியால் உருவாக்கப்பட்ட, என்னைக்காவது ஒருநாள் அழியப்போற இந்த உடம்பையே கப்புனு புடிச்சுக்கிட்டு இருக்குற பாவி நான்-னு தன்னைச் சொல்லிக்கிறாரு.

அபூர்வா: ஓ! “இந்த உடம்பைத் தாண்டி எனக்கு ஒரு நல்ல வழி (கதி) எப்போ கிடைக்கும்?”னு கேக்குறாரா?

வேதாந்த்: ஆமா! “கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்?” – உன்னுடைய அந்தத் தாமரை போன்ற திருவடிகளைப் பார்த்து, நான் உய்வதற்கு எப்போ வழி செய்வே? அப்படின்னு கேக்குறாரு. அப்புறம் முருகனோட ஒரு அழகான குணத்தைச் சொல்றாரு… “மதிவாணுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா!”

அபூர்வா: அது என்ன “மதிவாணுதல் வள்ளி”? நிலா மாதிரி முகம் கொண்ட வள்ளியா?

வேதாந்த்: கரெக்ட்! “மதி”ன்னா நிலா, “வாணுதல்”னா ஒளி பொருந்திய நெற்றி. சந்திரன் போல ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளியைத் தவிர வேற யாரையும் துதிக்க மாட்டேன்னு ஒரு ‘விரதம்’ இருக்காராம் முருகன்!

அபூர்வா: என்னது? கடவுளுக்கே ஒரு விரதமா?

வேதாந்த்: ஆமா!, வள்ளி மேல அவ்வளவு அன்பு வச்சிருக்காரு. “அப்படிப்பட்ட ஒரு உறுதி கொண்ட தேவர்களின் தலைவனே (சுர பூபதியே), எனக்கும் உன் மேல அந்த மாதிரி ஒரு உறுதியான பக்தியைக் கொடு, இந்த உடம்பு மேல இருக்குற பற்றை நீக்கு”ன்னு வேண்டுறாரு.

வேதாந்த்: இன்றைக்கான Takeaway:

  1. உடல் பற்று: உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம், ஆனால் அதுவே ‘நான்’ என்று நினைப்பது அறியாமை. அதைத் தாண்டிய ஆன்மாவைக் கவனிப்பதே அறிவு.
  2. உறுதியான பக்தி: முருகன் வள்ளி மீது வைத்திருக்கும் அந்த மாறாத அன்பைப் போல, நமக்கும் இறைவனிடம் ஒரு மாறாத பற்று (விரதம்) இருக்க வேண்டும்.

அபூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் நான் கண்ணாடி முன்னாடி நின்னு மேக்கப் போடும்போது, “இந்த உடம்பைத் தாண்டி ஒரு முருகன் இருக்காரு”ன்னு எனக்கே ஞாபகப்படுத்திக்கிறேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) சூப்பர்! அந்தத் தெளிவு இருந்தாலே முகம் இன்னும் பிரகாசமாத் தெரியும்! நாளைக்கு 37-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 36 Day 36

vidhikaaNum udambai vidaa vinaiyEn,
gathi kaaNa, malark kazhal endru aruLvaay
madhi vaaNudhal vaLLiyai alladhu pin
thudhiyaa viradhaa ! sura boopathiyE !

Vedaant: Apurva, today’s verse touches on a very deep truth. We spend so much of our time maintaining our physical bodies, don’t we? Arunagirinathar has something interesting to say about that.

Apurva: True, Vedaant. We go to the gym, follow diets, and use skincare just to look good. Is he saying we shouldn’t care about the body?

Vedaant: Not exactly. He’s talking about the “obsession” with the body. He says: “Vidhi kaanum udambai vidaa vinaiyen”. He refers to himself as a “sinner” who is tightly holding onto this body created by fate—a body that is destined to decay and disappear one day.

Apurva: I see. So he’s asking, “When will I find a better way (Gathi) beyond just this physical existence?”

Vedaant: Exactly! He asks, “When will You grant me the Grace to see Your flower-like feet (Malarkkazhal) so I can find salvation?” And then he describes a beautiful “vow” that Muruga takes: “Madhi vaanuthal Valliyai alladhu pin thudhiya viradhaa!”

Apurva: What does that mean? Does God have a “vow” too?

Vedaant: Yes! He describes Valli as having a forehead as radiant as the moon (Madhi). He says Muruga has a vow (Viradham) that He will not praise or look at anyone else but Valli!

Apurva: That’s so romantic and powerful! The Supreme Lord of the Heavens (Sura Boopathi) is so committed to His devotee Valli that He won’t even look elsewhere.

Vedaant: Right.  Arunagirinathar is saying, “O Lord, who is so loyal and firm in Your love for Valli, please grant me that same firmness in my devotion to You. Help me let go of my obsession with this temporary body and focus on Your eternal Grace.”

Vedaant: Ok, Takeaway:

  1. Beyond Biology: We are more than just a physical body created by fate. While we must maintain the body, we shouldn’t get so attached to it that we forget our spiritual destination.
  2. The Power of Commitment: Muruga’s “vow” to Valli symbolizes the intense, one-pointed focus a devotee should have toward God. True devotion is a “Viradham” (a sacred commitment).

Apurva: Got it, Vedaant! Next time I’m standing in front of the mirror, I’ll remind myself that there’s a Divine Grace beyond just this reflection!

Vedaant: (Laughs) That realization itself will make you glow more than any skincare! See you tomorrow for Verse 37!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *