Devotion General Literature

Day 35 Kandhar Anubhuthi (Daily Divine Delight)

TAMILENGLISH

கந்தர் அனுபூதி – பாடல் 35 நாள் 35

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல! சண்முகனே!
கங்கா நதி பால! க்ருபாகரனே!

வேதாந்த்: இன்னைக்கு நாம பார்க்கப்போற பாட்டு, ஒரு நிதர்சனமான உண்மையைச் சொல்லுது அபூர்வா. நாம எவ்வளவுதான் மேக்கப் (Makeup) போட்டாலும், வெளியில அழகா காட்டிக்கிட்டாலும், நம்ம மனசுக்குள்ள இருக்குற ஆசைகள் நம்மைக் குழப்பத்துல தள்ளிடும்.

அபூர்வா: ஆமா வேதாந்த், உலகத்துல கவர்ச்சியான விஷயங்களுக்குப் பஞ்சமே இல்ல! இங்கே, அருணகிரிநாதர் எதைப் பத்தி எச்சரிக்கிறாரு?

வேதாந்த்: “சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல்” – அப்படின்னு சொல்றாரு. அதாவது, அலங்காரம் செஞ்ச பெண்களோட அழகில் மயங்கி, அந்த ஆசையினால வர்ற ஒரு “தீய வழியில” (தவறான பாதை) போய், என்னோட அறிவுத் தெளிவு மங்கிப் போகாம இருக்க எனக்கு வரம் கொடுன்னு கேக்குறாரு.

அபூர்வா: ஏன் வேதாந்த், அழகை ரசிக்கிறது தப்பா? இது ஏன் “தீநெறி”ன்னு சொல்லப்படுது?

வேதாந்த்: அழகை ரசிக்கிறது தப்பில்லை அபூர்வா. ஆனா அந்த ரசனை ஒரு ‘அடிமைத்தனமா’ மாறி, நம்ம லட்சியத்தை மறக்க வச்சு, நம்ம கேரக்டரையே (Character) சிதைக்குதுன்னா அதுதான் தீநெறி. அப்படிப்பட்ட நேரத்துல நமக்குள்ள ஒரு பெரிய போர் நடக்கும். அந்தப் போரை ஜெயிக்க அவர் யாரைக் கூப்பிடுறாரு பாரு… “சங்க்ராம சிகாவல சண்முகனே!”

அபூர்வா: சங்க்ராம சிகாவல, அப்படின்னா, என்ன ?

வேதாந்த்: சங்க்ராம அப்படின்னா, போர். சிகாவல அப்படின்னா மயில்வாகனன், மகிழ்ச்சி தருபவன்னு பல அர்த்தங்கள் இருக்கு.

அபூர்வா: ஓஹோ… அப்போ முருகர் இங்க ஒரு “பாடி-கார்ட்” (Bodyguard) மாதிரி வர்றாரா?

வேதாந்த்: கரெக்டா சொன்ன! மயில் வாகனத்துல போர்க்களத்துக்கு வர்ற அந்த மாவீரன் சண்முகன், நம்ம மனசுக்குள்ள வர்ற தப்பான எண்ணங்களை வெட்டிச் சாய்க்கணும்னு வேண்டுறாரு. அப்புறம் “கங்கா நதி பால க்ருபாகரனே” – கங்கை நதி பெற்றெடுத்த மைந்தனே, கருணைக் கடலேன்னு முடிக்கிறாரு.

அபூர்வா: ஓ! ஒரு சமயம், மயில் மேல் அமர்ந்து போர்க்களம் புகும் மாவீரன் சண்முகன். அதே சமயம் கங்கையின் மைந்தன், கருணையின் வடிவம். இது எவ்வளவு அழகான முரண்பாடு, வேதாந்த்! ஒரு பக்கம் வீரமும், இன்னொரு பக்கம் தாயுள்ளம் கொண்ட கருணையும் இருந்தா மட்டும்தான் நம்ம மனசைச் சரியான பாதையில வைக்க முடியும்னு சொல்ல வர்றாரு!

வேதாந்த்:  கரெக்ட். இன்னைக்கு Takeaway:

  1. புத்தித் தெளிவு: தற்காலிக ஆசைகள் நம் அறிவை மறைக்கும் மேகம் போன்றவை. அந்த மேகம் விலகி அறிவு பிரகாசிக்க இறைவனின் அருள் ஒரு சூரிய ஒளி போலத் தேவை.
  2. மனப்போராட்டம்: நம் மனசு ஒரு போர்க்களம். அங்க வர்ற கெட்ட எண்ணங்களை ஜெயிக்க “சங்க்ராம சண்முகனின்” வீரமும், கங்கையின் தூய்மையும் நமக்குத் துணை நிற்கணும்.

அபூர்வா: ஓகே வேதாந்த்! இனிமேல் நான் ஏதாச்சும் தப்பான விஷயத்துக்கு ‘அட்ராக்ட்’ (Attract) ஆகும்போது, உடனே இந்த ‘வார்-மோட்’ (War mode) முருகனை மைண்ட்ல கொண்டு வருவேன்!

வேதாந்த்: (சிரிக்கிறான்) சூப்பர்! அந்தப் போர் வீரன் உன் மனசைப் பத்திரமாப் பார்த்துப்பார். நாளைக்கு 36-வது பாட்டுல சந்திப்போம்!

முருகா சரணம் !

Kandhar Anubhuthi – Verse 35 Day 35

singaara madandhaiyar thee neRi pOy
mangaamal enakku varam tharuvaay
sangraama sikaavala ! shaNmuganE !
gangaa nadhibaala ! krupaakaranE !

Vedaant: Today’s verse is very raw and honest, Apurva ! It deals with a struggle that almost every human faces—the struggle against overwhelming sensory attractions that lead us away from our higher purpose.

Apurva: That sounds like a universal problem, Vedaant. We are constantly surrounded by things designed to distract us and pull us toward fleeting pleasures. What is Arunagirinathar’s specific concern?

Vedaant: He says, “Singara madanthaiyar thee-neri poi mangamal enakku varam tharuvaay. He is asking for a boon so that his intellect doesn’t fade or get clouded (mangamal) by being obsessed with “beautiful, adorned people.” He calls this obsession a “dark path” (thee-neri).

Apurva: I see. But is appreciating beauty a bad thing? Why does he use such strong words like “dark path”?

Vedaant: Appreciating beauty isn’t the problem. The problem is when that attraction becomes an addiction, leading us to lose our self-control and spiritual focus. It’s like a fog that settles over your brain. To clear that fog, he calls upon a warrior: “Sangrama Shikavala Shanmugane!”

Apurva: What does “Sangrama Shikavala” mean ?

Vedaant: Sangrama means war. Shikhawala has many meanings, such as one who rides a peacock, referring to Lord Murugan or one who gives happiness.

Apurva: So he’s picturing Muruga as a General leading a charge?

Vedaant: Yes! He offers a prayer to the heroic Shanmugan, who arrives on his peacock to the field of battle, asking him to sever and eliminate the negative thoughts that emerge in our hearts. He then finishes with the phrase ‘Ganga Nadhi Bala Krubhakarane,’ which honors him as the son of the River Ganges and an ocean of compassion.

Apurva: Oh!  Shanmuga on peakcock as the Warrior and  at the same time, Son of the Ganges, the Embodiment of Mercy,  That’s a beautiful contrast Vedaant !

Vedaant: It really is. Arunagiri is saying, “O Lord, use Your warrior strength to shield me from temptation, but use Your mother-like mercy to guide me back to the right path.” He realizes that self-will isn’t enough; he needs Divine protection. Ok, the Takeaway:

  1. Protecting the Intellect: Temporary attractions are like clouds that cover the sun of our wisdom. We need Grace to keep our “inner light” from fading due to worldly distractions.
  2. The Inner Battlefield: Our mind is a constant battlefield. To win against negative impulses, we need both the warrior-strength of Muruga (Sangrama) and the purifying mercy of the Ganges (Krupakaran).

Apurva: Got it, Vedaant! Next time I feel like I’m losing my focus to some “shiny distraction,” I’ll just activate the “War-mode Muruga” in my mind!

Vedaant: (Laughs) Perfect! With that Divine Warrior guarding your thoughts, you’ll stay on the right track. See you tomorrow for Verse 36!

Muruga Charanam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *