Day 30 Kandhar Anubhuthi (Daily Divine Delight)
கந்தர் அனுபூதி – பாடல் 30 நாள் 30
இல்லே எனும் மாயையில் இட்டனைநீ,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே,
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே!
வேதாந்த்: அபூர்வா, நேத்து நாம அந்த மகா அதிசயத்தைப் பார்த்தோம்ல? “நான்” மறைஞ்சு “அவன்” மட்டும் நிக்கிற நிலை. இன்னைக்கு அருணகிரிநாதர் மறுபடியும் கொஞ்சம் கீழ இறங்கி வந்து, நாம ஏன் அந்த நிலையை அடைய முடியாம கஷ்டப்படுறோம்னு சொல்றாரு.
அபூர்வா: ஆமா வேதாந்த், நேத்து ஏதோ ஸ்பேஸ்க்கு (Space) போன மாதிரி இருந்துச்சு! இன்னைக்கு என்ன சொல்றாரு? “இல்லே எனும் மாயை” அப்படின்னா என்ன?
வேதாந்த்: நாம எப்போவும் “இது இல்ல, அது இல்ல, எனக்கு நிம்மதி இல்ல” அப்படின்னே சொல்லிட்டு இருக்கோம்ல? எதுவுமே இல்லைன்னு சொல்ற அந்தப் ‘பூஜ்ய’ மாயையில என்னை நீ தள்ளிட்டியேன்னு முருகன்கிட்ட கேக்குறாரு. “பொல்லேன் அறியாமை பொறுத்திலையே” – அதாவது, “ரொம்ப பொல்லாதவனான என்னோட இந்த அறியாமையை நீ இன்னும் பொறுத்துக்கலையா?” அப்படின்னு ஒரு சின்ன ஆதங்கத்தோட கேக்குறாரு.
அபூர்வா: ஓ! “நான் தப்பு பண்றேன் தான், ஆனா நீ பெரிய ஆளாச்சே, என்னைப் பொறுத்துக்கக் கூடாதா?”ன்னு கேக்குறாரா?
வேதாந்த்: கரெக்ட்! ஆனா அதுக்கு அப்புறம் முருகனைப் புகழ்ற விதம் தான் ரொம்ப அழகு. “மல்லே புரி பன்னிரு வாகு” – மல்யுத்தம் செய்யுற அளவுக்கு வலிமையான பன்னிரண்டு தோள்களை உடையவனே! அந்தத் தோள்கள்ல எதை அவர் மாலையா அணிஞ்சிருக்காராம் தெரியுமா?
அபூர்வா: எதை? ஏதும் தங்கச் சங்கிலியா இல்ல வைர மாலையா?
வேதாந்த்: இல்லடா, “என் சொல்லே புனையும்” – என்னோட இந்த சாதாரண சொற்களை (பாடல்களை) மாலையா அணிஞ்சுக்கிறாராம் அந்தச் சுடர் வேலவன்!
அபூர்வா: வாவ்! அவ்வளவு பெரிய வீரமான தோள்கள்ல, ஒரு அடியவனோட கவிதையை மாலையா போட்டுக்கிறாரா? இது எவ்வளவு பெரிய கௌரவம்!
வேதாந்த்: ஆமா! “என் அறிவு கம்மிதான், நான் அறியாமையில தான் இருக்கேன், ஆனா நான் பாடுற பாட்டை மட்டும் நீ ஆசையா ஏத்துக்கிறியே” அப்படின்னு நெகிழ்ந்து போறாரு.
அபூர்வா: ப்யூட்டிஃபுல் வேதாந்த். அருணகிரியார் அப்ரோச் அட்டகாசம்.
வேதாந்த்: சரியாச் சொன்ன அபூர்வா. சரி, இன்னிக்கு Takeaway:
- பொறுமை வேண்டல்: நம்முடைய அறியாமையையும் தவறுகளையும் இறைவன் பொறுத்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை தான் நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.
- சொல் மாலை: இறைவனுக்குத் தங்கமும் வைரமும் தேவையில்லை. நாம் அன்போடு சொல்லும் “முருகா” என்கிற ஒரு சொல் போதும், அதை அவர் வைர மாலையாக ஏற்றுக்கொள்வார்.
அபூர்வா: சரி வேதாந்த்! இனிமேல் நான் பேசுற ஒவ்வொரு நல்ல வார்த்தையும் முருகனுக்குப் போடுற மாலையா நினைச்சுக்குறேன். அப்படின்னா… நாக்கை கொஞ்சம் கட்டுப்படுத்தணும் போல!
வேதாந்த்: (சிரித்து) அதுதான் அழகு! அப்படி வாழ்ந்தாலே தினசரி வாழ்க்கையில் புனிதம் புகுந்துவிடும் அபூர்வா. நாளை 31-வது பாடலோட சந்திப்போம்!
முருகா சரணம் !
Kandhar Anubhuthi – Verse 30 Day 30
illE enum maayaiyil ittanai nee,
pollEn aRiyaamai poRuththilaiyE,
mallEpuri panniru vaaguvil en
sollE punaiyum sudar vElavanE !
Vedaant: Good day Apurva ! Yesterday we were in that high spiritual state where the ego vanishes. Today, Arunagirinathar comes back to earth a bit and talks about why we struggle to stay in that state.
Apurva: Yeah, yesterday felt like we were floating in deep space! What is he saying today? What does “Ille enum maayai” mean?
Vedaant: It refers to the “Illusion of Nothingness” or the constant feeling of “I don’t have this, I lack that.” He asks Muruga, “Why did You toss me into this illusion?” And then he adds, “I am a wicked person (Pollan), but won’t You tolerate my ignorance (Ariyaamai) and forgive me?”
Apurva: So it’s like saying, “I know I’m messing up, but You’re the big boss—can’t You just be patient with me?”
Vedaant: Exactly! But look at how he describes Muruga’s reaction. He praises Muruga’s “Panniru vaagu”—His twelve powerful, muscular shoulders built for battle. Do you know what Muruga wears as a garland on those shoulders?
Apurva: What? Gold chains? Diamond necklaces?
Vedaant: No, no. Arunagirinathar says, “En solle punaiyum”. He wears my very words (my songs) as His garland!
Apurva: Wow! Such powerful, divine shoulders, and He chooses to wear a simple devotee’s poem? That is so humble and sweet of Him!
Vedaant: Right! Arunagirinathar is moved. He’s saying, “Even though I am ignorant and stuck in illusion, You still value my words and wear them proudly.”
Apurva: I get it! Muruga doesn’t look at how “smart” we are; He just looks at the love in our words.
Vedaant: Spot on Apurva. Ok, today’s Takeaway:
- Divine Patience: We are all works in progress. Recognizing our ignorance and asking for God’s patience is a vital step in spiritual growth.
- The Garland of Words: God doesn’t need expensive rituals. When you offer your sincere words and prayers, He wears them like a precious garland on His own shoulders.
Apurva: Okay, Vedaant! Every kind word I say is now a garland for Muruga. Guess I’ll be speaking very carefully!
Vedaant: (Laughs) That’s the spirit and that’s how holiness sneaks into daily life Apurva. See you tomorrow for Verse 31!
Muruga Charanam!
